திங்கட்கிழமை, அக்டோபர் 28, 2024

சொல்ல்லு.. இப்படியே பேசிட்டு இருக்க வேண்டியது தான்.. மக்களுக்கு விபூதி.. உங்களுக்கு நாமம்

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதில் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டதாம். இந்தப் பேச்சுப் போட்டியில், மொத்தம் 182 போட்டியாளர்களில் இருந்து முதல் மூன்று வெற்றியாளர்களை இறுதி செய்து அவர்களுக்கு பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது.

இதில் கூடவா வாரிசு அரசியல்..

இதில் சின்ராசும் கலந்துகொண்டிருக்கிறார். கலந்துகொண்ட சின்ராசு, அனைவரையும் ஒரே அடியில் தோற்கடித்துவிட்டாராம். இதை பெருமிதத்தோடு முதல்வர் முக ஸ்டாலின் சமீபத்தில் குறிப்பிட்டு பேசி இருக்கிறார். அதில் அவர் கூறியதாவது, “உதயநிதி அனைத்து டெஸ்ட்டிலும் 100 மதிப்பெண் பெறுகிறார். சமீபத்தில், சேலத்தில் திமுக இளைஞரணி மாநாட்டை சிறப்பாக நடத்திக் காட்டியவர் உதயநிதி” என பேசினார்”.

இப்படியே மாவு அரைத்துக்கொண்டிருக்க வேண்டியது தான்..

இதை கேட்ட நெட்டிசன்கள்.. “சொல்லு..இப்படியே மாவு அரைத்துக்கொண்டிருக்க வேண்டியது தான். இதை கேட்டு எங்களுக்கு காலணா கூட பிரயோஜனம் இல்லை.. இப்பொது என்ன கூறவருகிறீர்கள்? திறமைக்கு கொடுத்த வாய்ப்பு தான், உதயநிதிக்கு வழங்கப்பட்டுள்ளது.. வாரிசு அரசியல் இல்லை என்றா?”

“நீங்கள் இப்படியே விளையாடி கொண்டிருங்கள், நாங்கள் மக்களின் வாரிசாக கருதப்படும் தலைவனை தேர்ந்தெடுத்துவிட்டோம்.. இனியும் எங்களை திராவிடம், சமூக நிதி என்று ஏமாத்த முடியாது.. எங்களுக்கு தெரியும் சமூக நீதியென்றால் என்னவென்று.. “

“திராவிடமும் இல்லை.. தமிழ் தேசியமும் இல்லை.. மக்களுக்கான ஆட்சியை தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். நீங்கள் பேச தான் செய்வீர்கள்.. இந்த கேப்பில் தலைவர் ஸ்கோர் செய்து முன்சென்று கொண்டிருக்கிறார்.. கடையை சாத்திவிட்டு கிளம்புங்கள்” என்று நக்கல் செய்து வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News