வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

ஏறு முகத்தில் கமலின் வெற்றி பாதை.. கை கொடுத்த 2024

Kamal : உலகநாயகன் கமல் சில காலமாக தொடர் தோல்விகளை கொடுத்து வந்தார். அரசியலும் அவருக்கு சாதகமாக இல்லாத நிலையில் மீண்டும் படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அவ்வாறு அவர் நடிப்பில் வெளியான விக்ரம் படம் இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்தது.

இதைத்தொடர்ந்து இப்போது முழு வீச்சாக சினிமாவில் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அதுவும் கடந்த ஏழு சீசன்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல் சினிமாவில் பிஸியாக இருப்பதால் இந்த முறை பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.

ஆனாலும் 2024 ஆம் ஆண்டு கமலுக்கு ஒரு மகத்தான ஆண்டாக அமைந்திருக்கிறது. அதாவது ஆயிரம் கோடி பட்ஜெட்டில் உருவான பிரபாஸின் கல்கி படத்தில் ஹீரோவுக்கு இணையான சம்பளத்தை கமல் வாங்கி இருந்தார். ஆனால் அதில் ஒரு கெஸ்ட் ரோலில் தான் அவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2024 இல் மாபெரும் வெற்றி கண்ட கமல்

அடுத்ததாக கமலின் ராஜ் கமல் தயாரிப்பில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் அமரன் படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலை வாரி குவித்து வருகிறது. அமரன் படத்தின் மூலம் போட்ட பட்ஜெட்டை காட்டிலும் பல மடங்கு லாபத்தை கமல் அள்ள உள்ளார் என்பது இப்போது தெரிகிறது.

மேலும் கமல் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான இந்தியன் 2 படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் தியேட்டர் வசூல் ஓடிடி மற்றும் சாட்டிலைட் ஆகிய உரிமங்கள் பல கோடி வந்துள்ளதால் லைக்காவுக்கு எந்த நஷ்டமும் இந்தியன் 2 படத்தால் ஏற்படவில்லை.

அதேபோல் 2025-ம் கமலின் கேரியரில் முக்கியமான ஆண்டாக அமைய இருக்கிறது. ஏனென்றால் இந்தியன் 3 படு பயங்கரமாக உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் தக் லைஃப் படம் அடுத்த ஆண்டு வெளியாகிறது.

Trending News