வியாழக்கிழமை, நவம்பர் 7, 2024

கூட்டமெல்லாம் வோட்டாக முடியாது.. இத்தனை நாள் என்ன கோமாவில் இருந்தீர்களா? காண்டான காமெடி நடிகர்

விஜய் முதல் மாநாடு நடத்தியத்திலிருந்து பலருக்கு வயிற்றில் புளியை கரைத்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஒரு சிலர் விமர்சித்து பெரிய ஆள் ஆக விஜயை ஆக்கிவிட கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.

முதல் ஒரு நாள் அமைதியாக இருந்த பல கட்சி தலைவர்கள், தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். மாநாட்டில், திமுகவை ஊழல் கபடதாரிகள் எனவும் திராவிட மாடல் அரசு என மக்கள் விரோத ஆட்சியை நடத்துவதகாவும் கடுமையாக விமர்சித்தார். இதை தொடர்ந்து, திருமாவளவனை ஏவி விட்டு திமுக வேடிக்கை பார்க்கிறது. மறுபக்கம் சீமான் ரசிகர்களிடம் மோசமான விதத்தில் வசவு வாங்கி விட்டு இப்போது அமைதியாக இருக்கிறார்.

இத்தனை நாள் என்ன கோமாவில் இருந்தீர்களா..

விஜய் மாநாட்டில் பல காட்சிகளை விமர்சனம் செய்து பேசி இருந்தார். ஆனால் அதிமுக-வை மட்டும் விமர்சிக்கவில்லை. இது பேசு பொருளாக சமீபத்தில் மாறி இருந்தது. மேலும், அதிமுக மட்டும் ஊழல் செய்யவில்லையா? அவர்களை மட்டும் ஏன் விஜய் விமர்சிக்கவில்லை என்று சமீபத்தில் கூட, பலர் விமர்சித்திருந்தனர்.

இந்த நிலையில் இது தொடர்பாக பத்திரிக்கையாளர் எஸ்.வி. சேகரிடம் கேள்வி கேட்டார்கள். அதில், அவர் கூறியது மீண்டும் விஜய் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக எஸ்.வி.சேகர் கூறியதாவது.

திமுக-கு எப்போதுமே அதிமுக தான் போட்டி. ஒரு நாளில் வந்து அதையெல்லாம் விஜயாள் மாற்றி விட முடியாது. கூட்டம் இவ்வளவு கூடினாலும், அது எல்லாம் வோட்டாக மாறாது. இதை விட அதிகமான கூட்டம் சிரஞ்சீவி, பாலையா, பவன் கல்யாணுக்கு கூடியது. அவர்களுக்கெல்லாம் அது வோட்டாக மாறவில்லை.

முதல் தேர்தலில் டெபாசிட் இழந்து வீடு சென்றார்கள். முதலில் விஜய் அரசியலையும் மக்களையும் புரிந்துகொள்ள வேண்டும் என்று விமர்சித்திருந்தார். இது ரசிகர்களுக்கு கடுப்பாகி, “இவ்வளவு நாள் என்ன கோமா வில் இருந்தீர்களா? இப்போது வந்து இப்படி பேசுகிறீர்கள்” என்று விமர்சிக்க துவங்கி விட்டார்கள்.

- Advertisement -spot_img

Trending News