ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 24, 2024

முதல் மாநாடு தான் நடந்திருக்கு.. அதுக்குள்ள கொலை மிரட்டலா? எங்க போயி முடிய போகுதோ?

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகரான விஜய் அரசியல் கட்சி தொடங்குவார் என அவரது ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்திருந்த நிலையில், தற்போது அரசியல் கட்சி துவங்கியதோடு முதல் மாநாடை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார்.

முதல் மாநாடு நடந்தது முதல் பல விமர்சனங்களை தொடர்ந்து சந்தித்து வருகிறார் நடிகர் விஜய். இதற்க்கு நடுவில் புதிய பிரச்சனை ஒன்று பூதாகரமாக வெடித்துள்ளது. கடந்த மாதம் 27ம் தேதி விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டை நடத்துவதற்கான அனுமதியை மிகுந்த சிரமத்திற்குப் பின் பெற்றார் நடிகர் விஜய்.

டிரைவருக்கு கொலை மிரட்டல்..

இந்நிலையில், மாநாட்டில் பங்கேகற்ற தவெகவினர் குறித்து பரபரப்பு புகார் ஒன்று காவல் நிலையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு என்று சிறப்பு வேன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், பத்திரமாக வந்து இறங்கினார்கள் மக்கள்.

ஆனால் இதுவரை, அந்த வேன் ஓட்டுநர்களுக்கான இதுவரை கூலியை தரவில்லையாம். மேலும், அதிர்ச்சியளிக்க கூடிய ஒரு விஷயமும் நடந்துள்ளது. இந்த கூலியை கேட்டு போனால், தொடர்ந்து அலைக்கழித்து வருகிறார்களாம்.

அது மட்டுமின்றி, மிகவும் மோசமாக திட்டியுள்ளார். மேலும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவிக்க படுகிறது. மேலும், மாநாட்டிற்கு, குடி போதையுடன் தான் தொண்டர்கள் வந்துள்ளார்கள். ரகளையில் ஈடுபட்டுள்ளாராம். அதையெல்லாம் சகித்து கொண்டு தான் மாநாட்டிற்கு கொண்டு வந்து இறக்கி விட்டோம் என்றும் அந்த ஓட்டுனர்கள் கூறியுள்ளனர்.

இதை தொடர்ந்து போலீசார், வழக்கு பதியாமல், சமந்த பட்டவர்களை அழைத்து பேசிவிட்டு, “நாங்கள் பேசிவிட்டோம், போயி உங்கள் கூலியை வாங்கி கொள்ளுங்கள் ” என்றனர். அதை நம்பி அங்குச் சென்றால், என்னை மிகவும் மரியாதைக் குறைவாக நடத்தினர். அங்குள்ள சிலர் அடிக்கப் பாய்ந்தனர். மேலும், டிரைவர்களை தரக்குறைவாக பேசி முடிந்தால் பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு கூறியதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர், என்று பகீர் கிளப்பியுள்ளார்.

இது அதிர்ச்சியையும், மக்களுக்கு ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -spot_img

Trending News