Kamal : கமல் படங்களில் எப்போதுமே சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது. மக்களுக்கு நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என்று அவர் முனைப்புடன் செயல்பட்டாலும் சில பிரச்சனைகளில் சிக்குவது வழக்கமாகத்தான் இருக்கிறது. அவ்வாறு கமல் நடிப்பில் வெளியான தேவர் மகன் படம் மிகப்பெரிய பிரச்சனை சந்தித்தது.
ஒரு சமூகத்தினரை உயர்வாக பேசுவதாக இந்த படத்திற்கு பிரச்சனை வலுத்தது. அதேபோல் கமலின் மற்றொரு படமான விருமாண்டி படத்தின் டைட்டிலில் தொடங்கி பல சிக்கலை சந்தித்தது. அடுத்ததாக கமல் ஊரைவிட்டு போகும் அளவுக்கு முடிவெடுத்த படம் தான் விஸ்வரூபம்.
இந்த படம் ரிலீஸ் ஆகுமா என்ற நிலைமை அப்போது இருந்தது. அதேபோல் கமல் நடிப்பில் வெளியான ஹேராம் படத்தில் தேச பிரிவினைக்கு காரணம் காந்தி என்று குறிப்பிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இவ்வாறு கமலின் படங்கள் ஜாதி ரீதியான பல பிரச்சனை சந்தித்த நிலையில் அமரன் படத்திற்கும் அதே நிலைமை ஏற்பட்டுள்ளது.
அமரன் படத்தால் கமலுக்கு ஏற்பட்ட பிரச்சனை
அதாவது அமரன் படத்தை ராஜ்கமல் மற்றும் சோனி பிக்சர்ஸ் தயாரித்தது. இந்த படத்தில் சிறுபான்மை முஸ்லிம்கள் மீது வெறுப்பை உண்டாக்கும் படியான காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் அமரன் படத்தை கமல் தயாரித்திருக்கிறார்.
இதனால் ராஜ்கமல் நிறுவனத்தை முற்றுகையிட்டு எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். ஒருபுறம் மு க ஸ்டாலின் முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என பல பிரபலங்கள் அமரன் படத்திற்கு பாராட்டுகளை கொடுத்து வருகிறார்கள்.
ஆனால் சமீபத்தில் அமரன் படத்தில் முகுந்த வரதராஜனின் ஜாதியை ஏன் குறிப்பிடவில்லை என சர்ச்சை எழுந்த நிலையில் இப்போது புதிதாக இந்த பிரச்சனை முளைத்துள்ளது. இதனால் கமல் என்ன செய்வது என்று தெரியாமல் மாட்டிக் கொண்டு முழிக்கிறார்.