ராம் சரணை வைத்து சங்கர் இயக்கி வரும் படம் கேம் சேஞ்சர். இந்த படம் 2025 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை விஜய்யின் வாரிசு படம் தயாரித்த தில்ராஜ் தயாரித்து வருகிறார். 450 கோடிகளில் இந்த படம் உருவாகி வருகிறது. பாடல் காட்சிகளுக்கு மட்டும் சங்கர் 20 கோடிகள் வரை செலவழிக்கிறாராம்.
இந்த படத்தின் தமிழ்நாடு தியேட்டரிக்கள் உரிமைகளை 40 கோடிகள் வரை விலை விலை பேசியுள்ளார் தில்ராஜ். ஆனால் தொகை பெரிது என இங்கே யாரும் வாங்குவதற்கு முன் வரவில்லை. இவ்வளவு பட்ஜெட் போட்டு எடுத்த படத்தை தமிழ்நாட்டில் யாரும் வாங்காததால் அப்செட்டில் இருக்கிறார்கள் தில்ராஜ்.
ஏன் யாரும் வாங்க முன் வரவில்லை என்று பார்த்தால் அவ்வளவு தொகை கொடுத்து வாங்க மாட்டோம் என மறுக்கின்றனராம். இந்த படத்திற்காக தியேட்டர் உரிமையாளர்கள் நிர்ணயித்த தொகை வெறும் 15 கோடிகள் தான். ஆனால் தில்ராஜ் 40 கோடிகள் கேட்பது அவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
கேம் சேஞ்சர் படத்தின் பட்ஜெட் 450 கோடிகள் என்பதால் இந்த விலையை நிர்ணயித்துள்ளார். 40 கோடிகளுக்கு குறைந்து கொடுக்க முடியாது என விடாப்பிடியாய் நிற்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் படத்துக்கு இவ்வளவுதானா எனக் கேட்டதும், இந்தியன் 2 படம் சங்கரை நம்பி வாங்கி நஷ்டம் அடைந்ததையும் தெரிவித்துள்ளனர்.
இதனால் விரக்தியான தில்ராஜ் இந்த படத்தை ஃப்ரீ டிஸ்ட்ரிபியூஷன் செய்துவிட்டார். படத்தை ரிலீஸ் செய்து வரும் கலெக்ஷனில் கமிஷனை எடுத்துவிட்டு மீதத்தை கொடுங்கள் என இலவசமாக கொடுத்தும் விட்டாராம். சத்யம் தியேட்டர் முன்னாள் ஓனர் சொரூப ரெட்டி தான் இந்த படத்தை வாங்கி இருக்கிறாராம்