Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், கலகம் பிறந்தால் தான் வழி பிறக்கும் என்பதற்கு ஏற்ப வெண்ணிலா விஷயத்தை வைத்து காவிரியை ராகினி மிரட்டி கொண்டு வந்தார். இதனால் ரண வேதனையை அனுபவித்த காவிரி இந்த விஷயத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்று விஜய்யின் பிறந்தநாளுக்கு வெண்ணிலாவை நேரடியாக வீட்டிற்கு கூட்டிட்டு வந்து விட்டார்.
வெண்ணிலாவை பார்த்ததும் விஜய்க்கு பழைய நினைவுகள் எல்லாம் மலர ஆரம்பித்து விட்டது. அத்துடன் வெண்ணிலவின் நிலைமையை பரிதாபத்துடன் விஜய் பார்க்க ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் வெண்ணிலவை சரி செய்து பழையபடி குணமாக்கி விட வேண்டும் என்பதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதும் வெண்ணிலாவுடன் நேரத்தை செலவிட்டு பேசுவதுமாக செய்து வருகிறார்.
ஆனால் இதை தவறாக புரிந்து கொண்ட காவேரி, தன்னை விட்டு விஜய் பிரிந்து விடுவாரோ என்று பயப்பட ஆரம்பித்து விட்டார். இதை பார்த்த ராகினி இந்த சூழ்நிலையை அவருக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று விஜய் மனதில் காவிரியை பொக்கிஷமாக நினைத்ததை எழுதி வைத்த கடிதத்தை கிழித்து விட்டார். அத்துடன் காவேரி இடம் இனி உன் வாழ்க்கை கேள்வி குறிதான்.
கூடிய சீக்கிரமே நீ இந்த வீட்டை விட்டு வெளியே போக நேரம் வந்து விடும் என்று சொல்லி பயமுறுத்தி வருகிறார். அத்துடன் இந்த சான்சை பயன்படுத்தி காவிரி மற்றும் விஜய்க்குள் விரிசல் ஏற்படுத்தி பிரித்து விட வேண்டும் என்று ராகினி சூழ்ச்சி பண்ண ஆரம்பித்து விட்டார். அதற்கேற்ற மாதிரி விஜய்யும், காவிரிக்கு நேரத்தை செலவிடாமல் சரியான பதிலையும் சொல்லாமல் அலைக்கழிக்கும் விதமாக வெண்ணிலா பின்னாடியே சுற்றுகிறார்.
இதையெல்லாம் பார்த்த காவேரி இனி நாம் இந்த வீட்டில் இருக்க வேண்டாம் என்று வீட்டை விட்டு வெளியே போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் தாத்தா இதை சரி செய்ய வேண்டும் என்று விஜய் மற்றும் காவிரியை தனியாக பேச வைத்து இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டி விடுவார். பிறகு விஜய் உடன் சேர்ந்து காவிரியும் வெண்ணிலாவை குணப்படுத்த எல்லா உதவிகளையும் செய்ய ஆரம்பித்து விடுவார். கடைசியில் இந்த பிரச்சினையை வைத்து குளிர் காய வேண்டும் என்று நினைத்த ராகினி தோற்றுப் போய் நிற்பார்.