சமீபத்தில் நாகசைதன்யா சோபிதா துளிபலா திருமணம் கோலாகலமாக பாரம்பரிய முறைப்படி 8 மணி நேரம் நடந்து முடிந்தது. இதை தொடர்ந்து குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று ஸ்வாமி தரிசனமும் செய்துள்ளார்கள். நாகசைதன்யா திருமண அறிவிப்பை வெளியிட்டதிலிருந்தே, சமந்தாவின் reaction-னை தான் ரசிகர்கள் உற்று நோக்கி வருகின்றனர்.
ஆனால் சமந்தாவோ, எதையும் கண்டுகொள்ளாமல், தனது வேலையை பார்த்து வருகிறார். வாழ்த்தும் தெரிவிக்கவில்லை, வருத்தமும் தெரிவிக்கவில்லை. தான் உண்டு, தன் பிழைப்பு உண்டு என்று இருக்கிறார்கள்.
நாகசைதன்யா திருமணம் நடந்த நாளில் சமந்தா ஒரு சிறுமி, சிறுவனுடன் சண்டை போடுவது போல ஒரு வீடியோ பதிவை எடுத்து தன்னுடைய ஸ்டோரியில் வைத்திருந்தார். மேலும் எப்போதும் போல நன்றாக சண்டையிட்டு என்றும் எழுதி இருந்தார்.
இதை ரசிகர்கள், தனது பலமான மனநிலையை, உணர்த்தும் விதமாகவும் எதற்கும் களங்கமாட்டேன் என்பதை தெளிவு படுத்தும் விதமாக போட்டிருந்தார் என்று குறிப்பிட ஆரம்பித்தனர். இந்த நிலையில், தற்போது புதுமண தம்பதிகளான நாக சைதன்யா சோபிதா ஹனிமூன்-க்கு ஐஸ்லாந்து செல்லவிருக்கிறார்கள்.
சமந்தா போட்ட ஸ்டோரி
இந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியான அதே நேரத்தில் சமந்தா ஒரு ஸ்டோரி போட்டுள்ளார். அதில் தன்னை உண்மையாக காதலிக்கும் ஒருவரை பற்றியும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், ஷாக் ஆவதற்கு பதிலாக வருத்தப்பட ஆரம்பித்து விட்டார்கள்.
சமந்தா செல்லமாக ஒரு நாய் வளர்க்கிறார். அதன் பெயர் ஷாஷா.. எப்போதும் அந்த நாய் மட்டும் தான் சமந்தாவுடன் ஒரு எமோஷனல் சப்போர்ட் ஆக இருந்துள்ளதாம். இதை தனது ஸ்டோரியில் என்மீது உண்மையான காதலை செலுத்தும் ஒரே ஆள் ஷாஷா என்று குறிப்பிட்டுள்ளார். இது பலருக்கு கனெக்ட் ஆகியுள்ளது.
மனிதர்கள் ஏற்படுத்தும் காயங்களுக்கு ஒரு மருந்தாக, நாய்களும் பூனைகளும் தான் உள்ளது. வாய் திறந்து பேசி ஆறுதல் கூற முடியவில்லை என்றாலும், அதற்க்கு தெரிந்த பாஷையில், அன்பாக நமது அருகாமையில் வந்து அமர்ந்துகொள்ளும். அதன் குட்டி சேட்டைகள், ஆறுதலாக அமையும்.