விஜய்-யின் அரசியல் வருகை தமிழகத்தையே உலுக்கி வருகிறது. மிகப் பெரிய உச்ச நட்சத்திரமாக இருக்கும் போதும், தமிழகத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருக்கும் போதும் அதை விட்டு விலகி அரசியலுக்கு வருவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்த சூழலில் பல லெட்டர் பேடு கட்சிகள் காணாமல் போகும் சூழ்நிலையை உருவாகி உள்ளார் விஜய். இது மட்டுமா தமிழகத்தின் ஆளுங்கட்சியான திமுகவையே புருவத்தை உயர்த்த செய்துள்ளது.
சமீபத்தில் விகடன் நடத்திய “அனைவருக்கமான தலைவர் அம்பேத்கர்” என்ற புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது அனைத்து கட்சியினரிடம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிலும் முக்கியமாக ஆளுங்கட்சியான திமுகவை பார்த்து ‘இருமாப்புடன் 200’ என்று பேசி மக்கள் அதை ‘மைனஸ்’ செய்வார்கள் என்று சொல்லும் பொழுது அரங்கமே அதிர்ந்தது.
ஆளும் கட்சியினரோ விஜய் அவர்கள் ரஜினி மாதிரி அரசியலுக்கு வரேன் வரேன் என்று சொல்லி ஒதுங்கி விடுவார் என்று நினைத்தனர். ஆனால் விஜயோ சர்கார் பட பாணியில் அடிப்பார் என்று எதிர்பார்க்கவில்லை.
அதற்கு எடுத்துக்காட்டாக முதல்வர் அவர்களே சற்று தடுமாறி தற்போது அரசு விளம்பரங்களில் கலைஞர் அவர்களின் புகைப்படத்துக்கு கீழே ‘பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வாசகத்தை அச்சடிக்க ஆரம்பித்து விட்டனர். அது விஜய் அவர்களின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் ஒரு வரி கோட்பாடு வாக்கியம் என்பதற்காகவே பயன்படுத்துகின்றனர்.
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் விஜய் இங்கு உள்ள அரசியல்வாதிகளின் தூக்கத்தை காலி செய்து கொண்டிருக்கிறார் என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.