அப்போ சிவகார்த்திகேயனுக்கு மட்டும் அரசியல் புரிதல் இருக்கா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

சிவகார்த்திகேயன் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி பிசி நடிகராக வளம் வருகிறார். அமரன் படம் கொடுத்த வெற்றி அவரை கிட்டத்தட்ட டயர் 1 நடிகர்களுக்கான அந்தஸ்தையே அவர் பெற்றுவிட்டார் என்று கூறலாம்.

தற்போது சுதா கொங்காரா மற்றும் சிவகார்த்திகேயன் புறநானூறு படத்தில் இணைந்துள்ளார்கள். ஆரம்ப நாள் முதலே இருவருக்கும் 7 அறையாக தான் இருக்கிறது.

சின்ன சின்ன விஷயத்திலும் ஈகோ கிளாஷ் ஏற்படுகிறது என்று சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் இணைந்ததுக்கு முக்கிய காரணமே சூர்யா படத்திலிருந்து விலகியது தான்.

அவர் தொடர்ந்து பாலிவுட் படங்களில் கவனம் செலுத்த இருக்கிறார், அதனால் தான் சுதா கொங்காரா படத்தில் நடிக்கவில்லை என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தது…

உண்மையான காரணம் என்ன?

இந்த நிலையில், சூர்யா புறநானூறு படத்தில் நடிக்காததன் உண்மையான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது. புறநானூறு படத்தில் ஒரு முக்கியமான அரசிய பேச படுகிறது. இது ஆதி காலம் முதலே இங்கு பெரும் சர்ச்சையான டாபிக் ஆகவே பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த அரசியல் பற்றி நடிகர் சூர்யா-க்கு சரியான புரிதல் வேண்டும் என்ற எண்ணத்திலும், ‘ஒரு விஷயத்தை பற்றி தெரியாமல் பேசக்கூடாது..’ என்று நினைத்துள்ளாராம்.

மேலும் கால் ஷீட் பிரச்சனையும் இருந்துள்ளது. இந்த காரணத்தால் தான் சுதா கொங்காரா இயக்கத்தில் சூரிய நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஆனால் நெட்டிசன்கள் இதை கேள்விப்பட்டதில் இருந்து, “அதெல்லாம் ஒன்னும் இல்ல.. அவர் மனைவி மும்பையை சேர்ந்தவர். மேலும் அடுத்து ஹிந்தி படங்களில் நடிக்கிறார்.

இப்போ போயி எதற்கு ஹிந்தி தெரியாது போடா என்று வசனம் பேச வேண்டும் என்று நினைத்திருப்பார்” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் சூர்யாக்கு இந்த அரசியல் புரிதல் இல்லை என்று சொன்னீர்கள்! சிவகார்த்திகேயனுக்கு மட்டும் இருக்கா? அவருக்கு இந்த அரசியல் பற்றி என்ன தெரியும் என்று நடிக்க ஒப்புக்கொண்டார் என்றும் விமர்சித்து வருகின்றனர்.

ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது.. போக போக போராட்ட களம் தான் போல..

Leave a Comment