Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபியை வீட்டை விட்டு பாக்கியா போக சொல்லி இருந்தாலும் ஈஸ்வரி சென்டிமென்டாக பேசி பாக்கியாவை வாயடைக்க வைத்து விட்டார். இதனால் கோபி நினத்தபடி பாக்யா வீட்டில் இருக்கிறார். அத்துடன் எழிலையும் அமிர்தவையும் வீட்டிற்கு கூட்டிட்டு வந்தால் நன்றாக இருக்கும் என்று கோபி, ஈஸ்வரிடம் சொல்கிறார்.
உடனே ஈஸ்வரி, எழிலுக்கு போன் பண்ணி வீட்டுக்கு வர வைக்கிறார். எழிலும் அமிர்தாவை கூட்டிட்டு பாக்யா வீட்டிற்கு வந்துவிடுகிறார். வந்த பிறகு ஈஸ்வரி நீ இனிமேல் எங்க கூட இந்த வீட்டிலேயே இரு. வேற எங்கேயும் போய் கஷ்டப்பட வேண்டாம் என்று சொல்கிறார். இதனை கேட்ட பாக்கியா, அதெல்லாம் முடியாது அவன் சாதிச்ச பிறகுதான் இந்த வீட்டுக்கு வர வேண்டும்.
அதுவரை இங்கே வரக்கூடாது என்று சொல்லிவிடுகிறார். இதற்கு ஈஸ்வரி, நீ எதற்கெடுத்தாலும் விதண்டாவாதம் பண்ணி பேசிக்கிட்டே இருப்பியா? ஒற்றுமையா ஒட்டுமொத்த குடும்பத்துடன் எல்லாரும் இருந்தா நன்றாக இருக்கும் என்று கோபி ஆசைப்பட்டான். அவன் ஆசையிலும் நியாயம் இருக்கிறது தானே, அதனால் தான் எழிலை இங்கே கூப்பிடுகிறேன் என்று சொல்கிறார்.
அதெல்லாம் ஒன்னும் வேண்டாம், ஏனென்றால் அவன் இங்கு வந்து விட்டால் லட்சியத்தில் ஜெயிப்பதற்கு பல தடைகள் வரும். நீங்கள் குழந்தை பற்றி கேட்டு பிரச்சினை பண்ணுவீங்க. எதற்கெடுத்தாலும் அமிர்தாவை குறை சொல்லிக் கொண்டே இருப்பீங்க அதனால் அவன் ஜெயித்து விட்டு கெத்தாக இங்கு வரவேண்டும் என்று சொல்கிறார். இதை வைத்து ஈஸ்வரிக்கும் பாக்யாவிற்கும் பஞ்சாயத்து வந்த நிலையில் ஏழில், அம்மா சொல்வது தான் கரெக்ட்டு.
நான் இப்போதைக்கு இங்க வருவதாக ஐடியாவே இல்லை, என்னை விட்டு விடுங்கள் என்று சொல்லி கிளம்பி விடுகிறார். உடனே கோபி இதுதான் சான்ஸ் என்று பாக்யாவிற்கு சப்போர்ட் பண்ணும் விதமாக நம்ம பாக்கியத்தான போக போக புரிந்து கொள்வாள் அம்மா இப்பொழுது ஏதும் பேச வேண்டாம் என்று ஈஸ்வரியை ரூம்குள் கூட்டிட்டு போய்விடுகிறார்.
ஆக மொத்தத்தில் ஏதாவது சதி வேலையை பண்ணி கோபியை இங்கே இருக்க வைக்க வேண்டும் என்பதற்காக ஈஸ்வரி பல தில்லாலங்கடி வேலைகளை பார்க்க ஆரம்பித்து விட்டார். இதனால் பாக்யாவும், ஈஸ்வரி என்ன சொன்னாலும் அதை தலையாட்டும் பொம்மையாக கேட்டுக் கொண்டு அடங்கி வருகிறார். அடுத்ததாக இனியா மற்றும் கோபி பேசிக் கொண்டிருக்கும் பொழுது ராதிகா வீட்டிற்கு வருகிறார்.
வந்ததும் கோபியிடம் உடம்பு பற்றி விசாரித்ததும் நாளைக்கு நம்ம வீட்டுக்கு வர முடியுமா என்று ராதிகா கேட்கிறார். அதற்கு ஏன் என்னாச்சு என்று கோபி கேட்ட நிலையில் நாளைக்கு மயூவின் பிறந்தநாள் என்று சொல்கிறார். உடனே கோபி ஐயையோ நான் மறந்துவிட்டேன் என்று சொல்லிய நிலையில் ராதிகாவிடம் நான் வருகிறேன் என்று கோபி சொல்லிவிடுவார்.
ஆனால் கோபியை அங்கே போக விடாமல் தடுக்க வேண்டும் என்பதற்காக இனியா மற்றும் ஈஸ்வரி ஏதாவது சூசமங்களை பண்ணி கோபியை தடுத்து விடுவார். இதனால் உச்சகட்ட கோபத்தை அடையப் போகும் ராதிகா இனி கோபியின் சகவாசமே வேண்டாம் என்று பெரிய கும்பிடு போட்டு போய்விடுவார்.