சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

எதிர்நீச்சல் 2 சீரியலில் ஜீவானந்தம் வைத்த ட்விஸ்ட்.. நான்கு மருமகளிடம் சிக்கி சின்னாபின்னமாக போகும் குணசேகரன்

Ethirneechal 2: முடிந்து போன ஒரு சீரியலுக்கு இந்த அளவுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது என்றால் அது முழுக்க முழுக்க எதிர்நீச்சல் சீரியலுக்கு மட்டுமே. யாருமே எதிர்பார்க்காத வகையில் அவசர அவசரமாக எதிர்நீச்சல் சீரியல் முடிந்து போனதால் ஒட்டுமொத்த மக்களும் இரண்டாம் பாகத்தைக் கொண்டு வாங்கள் என்று ஏக்கத்துடன் அவர்களுடைய ஆதங்கத்தை சொல்லி வந்தார்கள்.

ஆனால் இரண்டாம் பாகத்திற்கு வாய்ப்பே இல்லை, வேண்டுமென்றால் வேறு ஒரு புது கதையுடன் திரும்ப வருவேன் என்று இயக்குனர் திருசெல்வம் ஒரு இன்டர்வியூரில் பேட்டி கொடுத்திருந்தார். ஆனால் மக்களின் குரலுக்கு செவி சாய்க்கும் விதமாக சன் டிவி எடுத்த அதிரடியான முடிவு தான் எதிர்நீச்சல் 2 இரண்டாம் பாகத்தை கொடுக்க வேண்டும் என்று. அதன்படி இயக்குனர் திருசெல்வத்திடமும் பேச்சுவார்த்தை வைத்து இனி உங்கள் விஷயத்தில் நாங்கள் தலையிட மாட்டோம்.

உங்க இஷ்டப்படி கதைகள் இருக்கலாம் ஆனால் நிச்சயம் எதிர்நீச்சல் 2 வேண்டுமென்று வேண்டுகோள் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த வேண்டுகோளின் படியும் மக்களின் ஆதங்கத்தை தீர்த்து வைக்கும் விதமாகவும் இயக்குனர் திருச்செல்வம், சில நாட்களுக்கு முன் எதிர்நீச்சல் 2 வரப்போகிறது என்று அப்டேட்டை கொடுத்து விட்டார்.

இதனால் காத்துக்கொண்டிருந்த மக்களுக்கு பெரிய ஆனந்தமாகிவிட்டது. இருந்தாலும் ஜனனி கேரக்டரில் நடித்த மதுமிதாவுக்கு பதிலாக தொகுப்பாளனி பார்வதியை கமிட் பண்ணி வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் வெளியான ப்ரோமோ படி ஜனனி கதாபாத்திரத்திற்கு பார்வதி தான் சூட்டாக இருக்கிறார் என்பதற்கு ஏற்ப அவர்கள் நடிப்பு அனைவரையும் கவரப்போகிறது.

இதனை அடுத்து அனைவரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருப்பது இரண்டு விஷயத்தை தான். அந்த வகையில் குணசேகரன் கேரக்டருக்கு யார் நடிக்கப் போகிறார், அதே மாதிரி சக்தி கேரக்டரையும் மாற்றப் போகிறார்களா என்று சிலர் கேள்விகள் தொடர்ந்து எழுந்து வந்தது. ஆனால் தற்போது வந்த தகவலின் படி குணசேகரன் கேரக்டரில் வேலராமமூர்த்தி தான் நடிக்கப் போகிறார் என்றும் சக்தி கதாபாத்திரத்தில் அதே ஹீரோ தான் நடிக்கவும் போகிறார்.

இதுவரை குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த கேரக்டருக்கு நம் நினைவில் வைத்தது மாரிமுத்து தான். ஆனால் இனி இரண்டாம் பாகத்தில் நடிக்க போகும் குணசேகரன் கதாபாத்திரத்தில் வேலராமமூர்த்தி மக்களின் எண்ணங்களை புரிந்து கொண்டு எந்த மாதிரி இருக்க வேண்டும் என தெளிவாக உணர்ந்து அதற்கு ஏற்ற மாதிரி நடிப்பை பின்னி பெடல் எடுக்கப் போகிறார்.

அதனால் குணசேகரன் மற்றும் சக்தி கேரக்டர்கள் மாற்றப்படவில்லை. அதற்கு பதிலாக ஜீவானந்தம் வைத்த ட்விஸ்ட் என்னவென்றால் ரேணுகா மற்றும் ஞானத்தின் மகளாக நடித்த ஐஸ்வர்யாவையும், நந்தினி மற்றும் கதிரின் மகளாக நடித்த தாரா பாப்பாவிற்கும் பதிலாக இரண்டு புதிய கேரக்டர்களை உள்ளே கொண்டு வந்திருக்கிறார்கள். இவர்களை தொடர்ந்து கரிகாலன், அப்பத்தா, பட்டம்மா, ஈஸ்வரியின் மகன் தர்ஷா, தர்ஷினி என அனைத்து கேரக்டர்களையும் மாற்றாமல் உள்ளே கொண்டு வந்திருக்கிறார்.

மேலும் இதுவரை நாம் பார்த்தது குணசேகரனிடம் சிக்கித் தவித்த நான்கு மருமகளின் கண்ணீர் தான். ஆனால் தற்போது பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கேற்ப நீ மங்கையாய் பிறந்திடவே ஓர் மாதவம் செய்தாயோ, நீ சமையல் கட்டை தாண்டி புது சாதனை புரிய எதிர்நீச்சல் போட்டி எழுந்து வா, வாடிவாசல் தாண்டி திமிரு காளை போல் துள்ளி குதிப்பதற்கு தயாராகி விட்டார்கள்.

அந்த வகையில் இனி இந்த நான்கு மருமகளின் வெற்றி அவர்களின் ஆசைப்படி சொந்த கல்லில் நின்னு குணசேகரன் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் அளவிற்கு கதை சூடு பிடிக்க போகிறது. அதற்கு ஏற்ற மாதிரி இனி வாரத்தின் ஏழு நாட்களும் எதிர்நீச்சல் இரண்டாம் பாகம் வரப்போகிறது. மேலும் வருகிற திங்கள் கிழமை முதல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக போகிறது.

Trending News