திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

உண்மையான ஓனர் வந்து மனோஜ் ரோகினிக்கு போட்ட கோவிந்தா.. முத்துவிடம் உண்மையை சொன்ன ஜீவா

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ஜீவாவை கூட்டிட்டு முத்து ரிஜிஸ்ட்ரேஷன் ஆபீஸ்க்கு போகிறார். அதே ரிஜிஸ்ட்ரேஷன் ஆபீஸ்க்கு ரோகிணி மற்றும் மனோஜும் வருகிறார்கள். வந்து வாங்கப் போகிற வீட்டுக்கு ரிஜிஸ்ட்ரேஷன் செலவு என்ன ஆகும், எந்த மாதிரி பத்திரம் எல்லாம் வேண்டும் என்று விசாரிப்பதற்காக வந்திருக்கிறார்கள்.

அப்படி வந்த பொழுது வெளியே நின்னு கார் துடைத்துக் கொண்டிருந்த முத்துவை பார்த்ததும் மனோஜின் நண்பர் கூப்பிட்டு பேசுகிறார். அப்பொழுது மனோஜ் மற்றும் ரோகினி விசாரிப்பதற்காக வந்ததை தெரிந்ததும் முத்து மீதி பணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டியா என்று கேட்கிறார். அதற்கு மனோஜ், அப்பாவிடம் என்னுடைய பங்கை கேட்டதற்கு முடியாது என்று தடுத்து விட்டாய்.

ஆனாலும் நான் நினைத்தபடி அந்த வீட்டை வாங்குவேன் என்று சொல்லி ரிஜிஸ்ட்ரேஷன் ஆபீஸ்க்கு போய்விட்டார். அங்கே போனதும் அதைப்பற்றி விசாரித்துக் கொண்டிருக்கும் போது ஜீவாவும் ரெஜிஸ்ட்ரேஷன் விஷயமாக வந்ததால் அந்த முடித்து விட்டு திரும்பும் பொழுது ரோகினி மற்றும் மனோஜை, ஜீவா பார்த்து விட்டார். உடனே கடுப்பான ஜீவா கோபத்துடன் முத்துவின் காரில் ஏறிவிட்டார்.

அப்பொழுது என்ன ஆச்சு என்று முத்து கேட்ட பொழுது நான் யாரை வாழ்க்கையில் பார்க்கவே கூடாது என்று நினைத்தேனோ அவர்களை பார்த்து விட்டேன். என்னுடைய மனசை குழம்பி விட்டது, அதனால் வேறு எங்கேயும் போக வேண்டாம் என்னுடைய வீட்டில் போய் விட்ருங்க என்று சொல்லிவிட்டார். உடனே முத்துவும், ஜீவா வீட்டில் விட்டுவிட்டு லக்கேஜ் வீட்டிற்குள் கொண்டு போகிறார்.

அப்படி போனதும் ஜீவா, முத்து மற்றும் மீனாவுக்கு சேர்ந்து இரண்டு கண்ணாடி வாங்கிட்டு வந்ததை கொடுக்கிறார். அதை பார்த்ததும் முத்து சந்தோஷப்பட்ட நிலையில் நீங்கள் இந்த கண்ணாடியை கொடுக்கிற மாதிரி நம்ம ஒரு செல்பி எடுத்துக் கொள்வோம். அதை நான் என் மனைவியிடம் காட்டுகிறேன் என்று சொல்லி போட்டோ எடுத்துக் கொள்கிறார்.

அதன்படி முத்து, மீனாவிடம் அந்த கண்ணாடியை கொடுக்க நினைக்கும் பொழுது மீனா கோவிலில் இருந்ததால் நேரடியாக கோவிலுக்கு போகிறார். அங்க மீனாவின் அம்மா மற்றும் தங்கை இருந்த பொழுது முத்து மற்றும் மீனா, ஜீவா வாங்கி கொடுத்த கண்ணாடியை போட்டு செல்பி எடுத்துக் கொள்கிறார்கள். செல்பி எடுத்த போட்டோவை மீனாவின் தங்கை சீதா பார்க்கும் பொழுது முத்து போனில் ஜீவா முத்து சேர்ந்து எடுத்த செல்பி போட்டோவையும் பார்த்து விடுகிறார்.

உடனே சீதா, இவங்க தான் உங்க அண்ணன் கல்யாணத்தில் வந்து உங்க அண்ணன் கூட பேசிகிட்டு இருந்தாங்க. இவங்கதான் உங்க அண்ணனை ஏமாற்றிவிட்டு போனவர்கள் என்று சொல்லி விடுகிறார். பின்பு முத்து, அந்த ஜீவாவை தேடி வீட்டிற்கு போய் விசாரிக்கிறார். உடனே ஜீவா நடந்து உண்மையை சொல்லி 30 லட்ச ரூபாய் பணத்தையும் கொடுத்துவிட்டேன் என்ற அனைத்து உண்மையும் சொல்லிவிடுகிறார்.

இதற்கிடையில் மனோஜ் மற்றும் ரோகிணி வாங்க நினைக்கும் அந்த வீட்டில் பேசிக் கொண்டிருக்கும் பொழுது வீட்டிற்கு ரோமையா என்ற பெயர் போடு வரப்போகிறது. அதை மாட்டி விடலாம் என்று மனோஜ், ரோகினிடம் சொல்கிறார். அப்பொழுது அங்கே ஒரு கார் வந்த நிலையில், மனோஜ் நேம் போட்டு கொண்டு வந்து இருக்கீங்களா என்று கேட்கிறார்.

உடனே யார் வீட்டுக்கு யாரு நேம் போட்டு வைக்கணும், இது என்னுடைய வீடு என்று உண்மையான ஓனர் வந்து சொல்லிய நிலையில் மனோஜ் நம்பாமல் ஏமாற்றிய அந்த நபருக்கு போன் பண்ணி பார்க்கிறார். உடனே அந்த நபரின் போன் சுவிட்ச் ஆப் ஆனதால் மொத்தமாக அனைவரும் அதிர்ச்சியாகி ஏமாற்றத்தில் நிற்கிறார்கள்.

வழக்கம்போல் மனோஜ் இந்த விஷயத்திலும் ஏமாந்து விட்டான் என்று முத்து, மீனாவிடம் சொல்கிறார். ஓவராக ஆடிய மனோஜ் மற்றும் ரோகினிக்கு மொத்தமாக கோவிந்தா கோவிந்தா தான். இனிமேல் தான் இந்த கதை சூடு பிடிக்க போகிறது என்பதற்கு ஏற்ப ரோகிணி பற்றிய விஷயங்கள் ஒவ்வொன்றாக வெளிவரப் போகிறது.

Trending News