புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஏ.ஆர்.முருகதாஸை கான் படுத்தும் பாடு.. வருமா சிவகார்த்திகேயன் படம்

ஏ.ஆர். முருகதாஸ் தற்போது தமிழ் ஹிந்தி என்று இரண்டு மொழிகளில் படம் எடுத்துக்கொண்டு இருக்கிறார். தமிழில் சிவகார்த்திகேயன் வைத்து ஒரு படமும் ஹிந்தியில் சல்மான் கான் வைத்து ஒரு படமும் எடுத்துக்கொண்டு இருக்கிறார். இப்படி இருக்க, முதலில் இவர் இயக்கத்தில் எந்த படம் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

மேலும் சிக்கந்தர் படத்துக்காகவும் தமிழ் ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள். இப்படி பட்ட சூழ்நிலையில், இன்னும் ஒரு வார ஷூட்டிங் மட்டும் மீதமிருக்கும் நிலையில், அதை முடிக்க விடாமல் பாடாய் படுத்தி எடுக்கிறார் சல்மான் கான்.

படம் எடுக்க விடாமல் படுத்தும் பாடு..

சல்மான் கான் படத்தின் பாதி படப்பிடிப்பை முடித்த முருகதாஸ், சிவகார்த்திகேயன் படம் கொஞ்சம் உள்ளது. அத்தையிம் முடித்துவிட்டு இங்கு வருகிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் சல்மான் கான், அதற்க்கு ஒப்புக்கொள்ளவில்லை. எனது படம் ரம்ஜான்-க்கு ரிலீஸ் ஆகிறது. அதனால் முதலில் என் படத்தை கொஞ்சம் முடித்து கொடுத்துவிட்டு, அங்கு செல்லுங்கள். ப்ளீஸ் என்று கெஞ்சி கேட்டுள்ளார்.

ஏ.ஆர். முருகதாஸும் வேறு வழி இன்றி, அந்த படத்தை முதலில் முடிக்க திட்டமிட்டுள்ளார். அதை முடித்தபின் சிவகார்த்திகேயன் படத்தை முடிப்பார். ஆனால் சிவகார்த்திகேயன் அடுத்து சுதா கொங்காரா இயக்கத்தில் வேறு நடிக்க வேண்டும்.

அதனால், அதன் ஷூட்டிங் தள்ளி போக வாய்ப்புள்ளதால், அவரும் என் படத்தை சீக்கிரம் முடியுங்கள் என்று முருகதாஸிடம் கூறி வருகிறார்.

இப்படி மத்தளம் போல இரண்டு பக்கங்களிலும் இடி வாங்கும் முருகதாஸ் முதலில் எதை முடிக்க போகிறார். எப்போது கஜினி 2 படத்தை எடுப்பார் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இவர் பாணியை follow செய்யும் அட்லீயும் அங்கு பிசியாக இருப்பதை தொடர்ந்து, அடுத்து தமிழ் படம் எப்போது இயக்குவார் என்று தெரியவில்லை.

Trending News