புதன்கிழமை, ஜனவரி 8, 2025

ராதிகாவை வீட்டை விட்டு அனுப்ப கோபியிடம் பேசும் இனியா.. ஓவராக ஆடிய ஆட்டத்திற்கு பாக்யாவிடம் சிக்கிய ஈஸ்வரி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இது என்ன மறுபடியும் பழைய மாதிரியா என்பதற்கேற்ப தான் பாக்கியா வீட்டில் ஒரே கூத்தும் கும்மாளமாக இருக்கிறது. அதாவது கோபிக்கு ஏதாவது உடம்பு சரியில்லை என்றால் ஈஸ்வரி போய் கூட்டிட்டு வந்து விடுவார். கோபி வந்ததும் பின்னாடியே ராதிகாவும் வந்துவிடுவார்.

பிறகு இவர்களை சமாளித்து ஏதாவது காரணம் சொல்லி பாக்கியா வெளிய அனுப்புவது இதுதான் தொடர்ந்து பல மாதமாக வந்து கொண்டே இருக்கிறது. தற்போது இதே மாதிரி காட்சிகள் தான் ரிப்பீட் ஆகி இருக்கிறது. அதாவது கோபிக்கு நெஞ்சு வலி வந்ததும் ஈஸ்வரி பதட்டத்தில் மகனை வீட்டிற்கு கூட்டிட்டு வந்து விட்டார். இதனால் கடுப்பான ராதிகா நீங்களும் வேண்டாம், உங்க உறவு வேண்டாம் என்று வேறொரு வீட்டுக்கு போனார்.

உடனே பாக்கியா, கோபியை உசுப்பேத்தி விட்டு ராதிகாவிடம் பேச அனுப்பினார். கோபமாக இருந்த ராதிகாவிடம் நைசாக பேசி பாக்யா வீட்டிற்கு கூட்டிட்டு வந்து விட்டார். ராதிகா வந்தது ஈஸ்வரி மற்றும் இனியாவுக்கு பிடிக்காததால் எப்படியாவது வீட்டை விட்டு அனுப்ப வேண்டும் என்று பிளான் பண்ணி விட்டார்கள்.

ஆனாலும் கோபிக்கு தற்போது நெஞ்சுவலி இருப்பதால் எதுவும் பேசாமல் கொஞ்ச நாள் பொறுத்து இருக்கலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார்கள். பிறகு பாக்கியா அவங்க குடும்பத்துக்கு சமைத்து சாப்பாடு கொடுத்து விட்டு இருக்கும்பொழுது ராதிகா, கோபி மற்றும் மயூவுக்கு உப்புமா செய்து கொடுத்துட்டு மதியம் லெமன் சாதம் உருளைக்கிழங்கு வைத்துவிட்டு ஆபீஸ்க்கு கிளம்பி விடுகிறார்.

இதனால் கடுப்பான ஈஸ்வரி, மொத்த கோபத்தையும் பாக்கியா மீது காட்டி வருகிறார். ஈஸ்வரி மட்டுமில்லாமல் இனியாவும், பாக்யாவை பார்த்து நீ ஏன் அப்பாவிடம் ராதிகாவை பார்த்து பேச சொன்னாய். நீ சொன்னதால தான் அப்பா ராதிகா மற்றும் மயூவை வீட்டிற்கு கூட்டிட்டு வந்து விட்டார்கள் என்று பாக்கியவிடம் சண்டை போடுகிறார். ஆனால் பாக்கியா, நான் எதுவும் பண்ணவில்லை உங்க மனைவி மற்றும் பிள்ளைகளிடம் போய் பேசிட்டு வாங்க என்று தான் நான் சொன்னேன்.

மற்றபடி முடிவு எடுத்ததெல்லாம் உங்க அப்பா தான், எதனாலும் அவர்கிட்ட போய் கேட்டுக்கோ என்று சொல்லிவிடுகிறார். உடனே இனியா, ஈஸ்வரிடம் நான் அப்பாவிடம் இப்பொழுதே போய் பேசிட்டு வருகிறேன் என்று சொல்லிப் போகிறார். அப்படி ராதிகாவை வீட்டை விட்டு அனுப்பலாம் என்று சொல்ல போகும் பொழுது கோபி கொஞ்சம் மாத்திரை போட்டு பதட்டம் அடைந்து விடுகிறார். இதனால் இனியா எதுவும் பேசாமல் வந்துவிடுகிறார்.

அது மட்டுமல்லாமல் நம் என்ன சொன்னாலும் சரி என்று மட்டுமே தலையாட்டிக் கொண்டிருந்த பாக்கியம் இப்பொழுது ஓவராக பேசிக் கொண்டிருக்கிறார் என்ற ஆதங்கத்தில் ஈஸ்வரி இருக்கிறார். ஆனால் ஓவராக ஆடிய ஈஸ்வரிக்கு இதுதான் சரியான பதிலடி என்பதற்கேற்ப தற்போது பாக்கியா, ஈஸ்வரியின் வாயை அடைக்கும் அளவிற்கு பதிலடி கொடுத்து விடுகிறார்.

Trending News