வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

8 பைனலிஸ்ட் Vs 8 கோமாளிகள்.. சிதறுமா வாக்குகள்.? சூடு பிடிக்கும் பிக்பாஸ் ஆட்டம்

Biggboss 8: பிக்பாஸ் இறுதி வாரம் நெருங்கி விட்ட நிலையில் வீட்டுக்குள் பழைய போட்டியாளர்கள் வந்துள்ளனர். இதனால் உள்ளிருக்கும் டாப் 8 நபர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

வெளியில் இப்படி இருக்கு அப்படி இருக்கு என உள்ளே வந்தவர்கள் ஏகப்பட்ட அலப்பறை கொடுத்து வந்தனர். இதனால் பிக்பாஸ் வெளியில் நடப்பதை பற்றி வாயை திறக்க கூடாது என ஆர்டர் போட்டார்.

இருப்பினும் பல்வேறு விஷயங்களை தெரிந்து கொண்டதில் இறுதி போட்டியாளர்களின் நிலை தற்போது குழப்பமான மன நிலையாக தான் இருக்கிறது.

அதிலும் பழைய எட்டு போட்டியாளர்கள் முத்துவை கீழிறக்க வேண்டும் என ஒரு மீட்டிங் போட்டு முடிவு செய்துள்ளனர். அதன்படி தற்போது வீட்டுக்குள் யார் இரண்டு பேர் வீட்டுக்குள் இருக்க தகுதி இல்லாதவர்கள் என பேச வேண்டும்.

சூடு பிடிக்கும் பிக்பாஸ் ஆட்டம்

இதன் மூலம் பழைய போட்டியாளர்கள் உள்ளே வருவார்கள். இதனால் ஆட்டம் சூடு பிடிக்கும் என்பது தான் பிக் பாசின் திட்டம். ஆனால் புதுசா வந்திருக்கும் எட்டு கோமாளிகளை வெளியே துரத்துங்கள் என்பதுதான் அனைவரின் மைண்ட் வாய்ஸ்.

அந்த அளவுக்கு இவர்கள் தீட்டும் சதித்திட்டம் எல்லாம் சகிக்கவில்லை. ஏற்கனவே இவர்களை பிடிக்காமல் தான் மக்கள் வெளியே துரத்தினார்கள்.

ஆனாலும் எந்த நம்பிக்கையில் இறுதிவரை போராடியவர்களோடு மோதுகிறார்கள் என்று தான் தெரியவில்லை.

எப்படியோ இதனால் ஏகப்பட்ட கண்டன்ட் கிடைக்கிறது. அந்த வகையில் தற்போது ஆரம்பித்துள்ள விவாதத்தால் ஓட்டு எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படும் என்பது மட்டும் உண்மை.

Trending News