வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

சிங்கப்பெண்ணில் அன்புவுக்கு மகேஷ் செய்ய போகும் பெரிய உதவி.. கை மாறாக ஆனந்தியை கொடுக்க போகும் அன்பு?

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே அன்பு ஆனந்தியின் காதலை பொருத்த வரைக்கும் இருதலை கொள்ளியாக தவித்துக் கொண்டிருக்கிறான்.

ஒரு பக்கம் உயிருக்கு உயிராய் காதலிக்கும் பெண், இன்னொரு பக்கம் உணர்வு பூர்வமாய் பழகும் நட்பு என திணறிக் கொண்டிருக்கிறான்.

இந்த நிலையில் தான் அன்பு மின் அம்மாவுக்கு பெரிய ஆபத்து வந்திருக்கிறது. திருடர்கள் கழுத்தில் இருக்கும் செயினை அறுக்கும்போது கீழே விழுந்து விடுகிறார் அன்புவின் அம்மா.

இதனால் அவருடைய தலையில் அடிபட்டதோடு தற்போது தலையில் உள்ளே ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் எப்படியும் அன்பு வின் அம்மாவின் மருத்துவ செலவிற்கு மகேஷ் தான் பணம் கொடுத்து உதவப் போகிறான் என்பது நன்றாக தெரிந்து விட்டது.

ஏற்கனவே அன்பு மகேஷ் காட்டும் பாசத்தால் உருகிப் போய் கிடக்கிறான் இதில் மகேஷ் கொடுக்கும் பணத்தால் அன்புவின் அம்மா உயிர் பிழைத்து விட்டால் அவ்வளவுதான் கதை முடிந்தது.

மகேஷின் காதலை சேர்த்து வைக்க கூட அதிக வாய்ப்பு இருக்கிறது.

அன்புவின் அம்மா எப்படி உயிர் பிழைக்கிறார், ஆனந்தியின் அண்ணன் வேலு இந்த விஷயத்தில் என்ன உதவி செய்கிறான் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News