Ajith: இயக்குனர் பார்த்திபன் எப்போதுமே ஏடாகூடமாக பேசக்கூடிய ஆள் தான். அவர் பேசும் ஒரு சில விஷயங்கள் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தும்.
சர்ச்சை வரவேண்டும் என்றே சில நேரம் அவர் சீண்டி பார்ப்பதும் உண்டு. அப்படி தான் தற்போது அஜித் ரசிகர்களை சீண்டிப் பார்த்திருக்கிறார்.
நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் சில நாட்களுக்கு முன்பு மீடியாவுக்கு ஒரு சில கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார்.
அதில் அஜித்தின் பத்மபூஷன் விருது பற்றியும் கேட்கப்பட்டு இருக்கிறது. அஜித் ஒரு சிறந்த மனிதர், நீ வருவாய் என திரைப்படத்திற்கு பிறகு எங்கள் இருவருக்குள்ளும் எந்த தொடர்பும் இதுவரை இல்லை.
வம்பை விலை கொடுத்து வாங்கிட்டாரே!
இருந்தாலும் அவருடைய நற்பண்புகள் மக்களால் பாராட்டப்படுகிறது. அவருக்கு இந்த விருது கொடுத்தது சரிதான் என பேசி இருக்கிறார்.
மேலும் பார்த்திபனிடம் அஜித்துக்கு விருது கொடுப்பதற்கு காரணம் விஜயின் அரசியல் வருகை தான்.
அவரை வெறுப்பேற்றி பார்க்க தான் அஜித்துக்கு விருது கொடுத்ததாக பேசுகிறார்கள் இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என கேட்கிறார்கள்.
அதற்கு பதில் அளித்த பார்த்திபன் எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது என்று நெற்றியில் அடித்தது போல் பதில் சொல்லி இருக்கிறார்.
தற்போது இந்த வீடியோ பெரிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. கண்டிப்பாக கொஞ்ச நாட்களுக்கு இணையத்தில் பார்த்திபனை வறுத்தெடுத்து விடுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.