Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியல் ஒரு வழியாக இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. மகேஷ் நேரடியாக அழகப்பன் இடமே திருமணத்திற்கு சம்மதம் வாங்கி விட்டான்.
அதே நேரத்தில் அன்புவின் அம்மா லலிதா சம்மதிக்கவே பல எபிசோடுகள் ஆகிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவர் சட்டென ஆனந்தியை தன்னுடைய மருமகளாக ஏற்றுக் கொண்டார். ஆனந்தியும் அன்பும் இதனால் உச்சகட்ட சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.
ஆனால் இவர்களுடைய சந்தோஷம் நெடுநாள் நீடிக்க போவது கிடையாது. அழகப்பன் மகேஷுக்கு வாக்கு கொடுத்து விட்டதால் கண்டிப்பாக அதை மீறக்கூடாது என நினைக்கக் கூடியவர்.
சென்டிமென்டில் லாக் பண்ணும் அழகப்பன்!
அது மட்டும் இல்லாமல் ஏற்கனவே ஜோசியக்காரர் 48 நாளைக்குள் திருமணம் நடக்கவில்லை என்றால் வீட்டில் பெரிய அசிங்கம் ஏற்படும் என்று சொல்லி இருப்பார்.
இதைப் பற்றியும் ஆனந்தியிடம் பேசி அவளை சென்டிமென்டாக லாக் பண்ண போகிறார். கடைசி வரை ஆனந்தியும் அன்பும் வாயை திறந்து மகேஷிடம் தங்களுடைய காதலை பற்றி தெரிவிக்க போவதில்லை.
இதனால் கோகிலா மற்றும் ஆனந்திக்கு ஒரே மேடையில் திருமணம் ஏற்பாடு நடக்கப் போகிறது. கடைசியில் அன்பு மற்றும் ஆனந்தியின் காதலை மகேஷ் தெரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது.
இவர்களுடைய காதல் பற்றி தெரிந்த பிறகு மகேஷ் தன்னுடைய காதலை விட்டுக் கொடுப்பானா என பொறுத்திருந்து பார்க்கலாம்