Dhanush: பொதுவாக பெரிய ஹீரோக்கள் தங்களுக்கு போட்டியாக இருக்கும் நடிகர்களை மறைமுகமாக தாக்குவது போல் படங்களில் வசனங்கள் இருக்கும்.
இது எல்லாம் படத்தின் பிசினஸ் வியாபாரத்திற்காக வைக்கப்படுவது தான்.
இதைத் தாண்டி நடிகர் சிம்பு நேரடியாக தனுஷை நேருக்கு நேர், உன்ன பத்தி தான் பேசுறேன் என்று சொல்லும் அளவுக்கு தனுசுக்கு எதிராக ஏழு வசனங்கள் பேசி இருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.
தனுஷை நேருக்கு நேர் தாக்கிய சிம்புவின் 7 வசனங்கள்
காளை: காளை படத்தில் வில்லன் லால் சிம்புவுடன் ஏ, நான் பொல்லாதவன் என்று சொல்வார். அதற்கு சிம்பு டேய் நான் கெட்டவன் என்று சொல்வது மாதிரி வசனம் இருக்கும்.
வல்லவன்: வல்லவன் படத்தில் பள்ளி காட்சியில் ரீமாசென்னை சிம்பு லெஃப்ட் அண்ட் ரைட் வாங்குவது போல் ஒரு காட்சி இருக்கும்.
அதில் என் லவ்வர் என்ன விட்டுட்டு போயிட்டாங்க அவங்கள என்கூட சேர்த்து வையுங்கன்னு போலீஸ் ஸ்டேஷன் வாசலில் நிற்பேன் பாத்தியா என்று பேசி இருப்பார்.
இதில் நேரடியாக தனுஷின் தேவதையை கண்டேன் படத்தை தான் கலாய்த்து இருப்பார்.
வாலு: படிக்காதவன் படத்தில் தனுஷ் தமன்னாவிடம் என்ன மாதிரி பசங்களை பார்த்தா புடிக்காது பார்க்க பார்க்க தான் பிடிக்கும் என்று சொல்லி இருப்பார்.
அதே வசனத்தை வாலு படத்தில் சிம்பு கொஞ்சம் மாற்றி வைத்திருப்பார். ஹன்சிகா சிம்புவிடம் சில பசங்கள பாக்க பாக்க தான் புடிக்கும்.
ஆனால் உன்னை பார்த்த உடனேயே புடிச்சிருக்கு என்று சொல்வது போல் இருக்கும்.
வானம்: வானம் படத்தில் சிம்பு தன்னுடைய காதலிக்காக 40 ஆயிரம் ரூபாய் பணத்திற்கு அலைவார்.
அப்போது சந்தானத்திடம் யாரிடம் இந்த பணத்தை கேட்பது என டிஸ்கஸ் செய்வது போல் ஒரு காட்சி இருக்கும்.
அதில் சிம்பு தனுஷ் கிட்ட கேக்கலாமா என்று சொல்லுவார். அதற்கு சந்தானம் அவன் உனக்கு நா கண்டிப்பா தரமாட்டான் என்று பதில் சொல்வது போல் காட்சி இருக்கும்.
பீப் சாங்: நடிகர் சிம்பு எழுதி பெரிய சர்ச்சையான பாடல் பீப் சாங். இந்த சர்ச்சை சமயத்தில் தனுஷ் மயக்கம் என்ன படத்தில் எழுதிய காதல் என் காதல் பாட்டை சுட்டிக் காட்டி இருப்பார்.
பத்திரிக்கையாளர் அவரிடம் கேள்வி கேட்கும் போது அடிடா அவள, வெட்டுடா அவளை என்று பாட்டு எழுதுறவங்களை எல்லாம் சும்மா விட்ருங்க என்று கோபமாக பேசி இருப்பார்.
அன்பானவன் அடங்காதவன் அசாராதவன்: அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தில் ஒரு காட்சியில் சிம்பு விஷால் தனுஷ் என்று யார் வந்தாலும் பிரிச்சு மேஞ்சிடுவேன் என்ற வசனத்தை பேசி இருப்பார்.
ஈஸ்வரன்: தன்னுடைய உடல் எடையை கிட்டத்தட்ட 30 கிலோ குறைத்து ஈஸ்வரன் படம் மூலம் ரசிகர்களுக்கு பெரிய ஷாக் கொடுத்தார்.
அந்த ட்ரெய்லர் வீடியோவில் அழிக்க வந்த அசுரன் இல்ல காக்க வந்த ஈஸ்வரன் என்று பேசி மீண்டும் தனுஷை வம்புக்கு இழுத்து இருப்பார்.