1. Home
  2. கோலிவுட்

தனுஷ், சிவகார்த்திகேயன் வரிசையில் தயாரிப்பாளராகும் சிம்பு.. ஆரம்பமே அமர்க்களம் தான்

தனுஷ், சிவகார்த்திகேயன் வரிசையில் தயாரிப்பாளராகும் சிம்பு.. ஆரம்பமே அமர்க்களம் தான்

Simbu: சிம்பு இன்று தன்னுடைய 41வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தனுஷ், சிவகார்த்திகேயன் வரிசையில் தயாரிப்பாளராகும் சிம்பு.. ஆரம்பமே அமர்க்களம் தான்

நேற்று ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் ராம்குமார் இயக்கத்தில் இவர் நடிக்கப் போகும் 49வது படத்தின் அறிவிப்பு வந்தது. அதை அடுத்து தக்லைஃப் பட குழுவினரும் போஸ்டர் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சிம்பு தனுஷ் சிவகார்த்திகேயன் வரிசையில் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருப்பது ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

ஆத்மன் சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் பெயரில் அவர் தயாரிக்க இருக்கும் முதல் படத்தின் அறிவிப்பு இன்று வரவுள்ளது. ஆனால் அதற்கு முன்பே அது தேசிங்கு பெரியசாமியின் படம் தான் என்ற தகவல் கசிந்துள்ளது.

ஆரம்பமே அமர்க்களம் தான்

சிம்புவின் 50ஆவது படமாக இது உருவாகும் என கூறப்படுகிறது. கமல் தயாரிப்பில் இப்படம் உருவாவதாக பல வருடங்களுக்கு முன்பே அறிவிப்பு வெளிவந்தது.

ஆனால் அதன் பிறகு எந்த அப்டேட்டும் வரவில்லை. இதற்காக சிம்பு கடும் பயிற்சி எடுத்த தன்னை மாற்றிக் கொண்டார்.

ஆனாலும் இந்த படம் பற்றிய எந்த தகவலும் ரசிகர்களுக்கு தெரியாமல் இருந்தது. சிம்புவும் வருட கணக்கில் காத்திருந்த நிலையில் தற்போது அவரே படத்தை தயாரிக்க முடிவு செய்துவிட்டார்.

அவருடைய தயாரிப்பில் முதல் படமாகவும் அவரின் நடிப்பில் 50வது படமாகவும் இது உருவாக இருக்கிறது.

பீரியட் கதையில் இரு தோற்றங்களில் சிம்பு நடிக்கும் இப்படத்திற்கு ஏற்கனவே எதிர்பார்ப்பு இருந்தது. தற்போது அவரே தயாரிப்பதால் கூடுதல் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.