Pandian Stores 2 serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ராஜி ஆசைப்பட்ட மாதிரி ராஜியை போலீஸ் ஆக்க வேண்டும் என்று லட்சியத்துடன் கதிர் வீட்டில் இருப்பவர்கள் என்ன நினைத்தாலும் பரவாயில்லை. அப்பா என்ன சொன்னாலும் அதைப் பற்றி யோசிக்காமல் மனைவிக்காக ரிஸ்க் எடுக்க வேண்டும் என்று ராஜியை எக்ஸாம் எழுதுவதற்கு சென்னைக்கு கூட்டிட்டு வந்து விட்டார்.
வரும் வழியில் ராஜிக்கு ஒரு அன்பான கணவராகவும் பொறுப்பான புருஷனாகவும் பாதுகாத்து மொத்த பாசத்தையும் காட்டிவிட்டார். ராஜியும் ஒவ்வொரு நிமிஷமும் தனக்கு சிறந்த வாழ்க்கை கிடைத்து இருக்கிறது என்பதை நினைத்து சந்தோஷப்பட்டு கொள்கிறார். இதனை தொடர்ந்து இருவரும் ஹோட்டலில் சாப்பிட போகும் பொழுது ராஜிக்கு பிடித்த சாப்பாடு வாங்கி கொடுத்து மீதம் இருக்கும் பணத்தில் தனக்கு வேண்டிய சாப்பாடு சாப்பிட்டு அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்கிறார்.
இதையெல்லாம் புரிந்து கொண்ட ராஜி, கதிரிடம் நம் கடற்கரைக்கு போகலாமா என்று கேட்கிறார். உடனே கதிரும் ராஜியின் சந்தோஷத்தை நிறைவேற்றுவதற்கு கடற்கரைக்கு கூட்டிட்டு போய்விடுகிறார். அப்பொழுது இருவருமே சந்தோசமான இருந்த தருணங்களில் கதிர், ராஜிடம் இனி அடிக்கடி நாம் இந்த மாதிரி வருவோமா என்று கேட்கிறார்.
அதற்கு ராஜிக்கும் சந்தோசம் ஏற்பட்ட நிலையில் வரலாம், ஆனால் வீட்டில் இருப்பவர்கள் எப்படி விடுவாங்க என்று கேட்கிறார். அதற்கு கதிர் அதெல்லாம் நான் பார்த்து சமாளித்துக் கொள்கிறேன் நாம் சந்தோஷமாக இருக்கலாம் என்று சொல்லி அவருடைய மனதில் இருக்கும் காதலை சொல்லாமல் ராஜிக்கு தெரியப்படுத்தி விட்டார். அந்த வகையில் ராஜிக்கு கதிர் நம்மளை காதலிக்க ஆரம்பித்து விட்டார் என்பதும் புரிந்து விடுகிறது.
நமக்கும் கதிர் மீது காதல் வந்துவிட்டது என தெரிந்து கொண்ட ராஜி உச்சகட்ட சந்தோஷத்திற்கு போய்விட்டார். இதையெல்லாம் தொடர்ந்து சக்திவேல் மற்றும் குமரவேலு ரோட்டில் வந்து கொண்டிருக்கும் பொழுது செந்தில் இவர்களை பார்த்து விடுகிறார். உடனே மீனாவை, சக்திவேல் ஆபீஸில் போய் மிரட்டியதற்காக பதிலடி கொடுக்க வேண்டும் என செந்தில், சக்திவேல் இடம் போய் நியாயம் கேட்கிறார்.
உடனே சக்திவேல் செந்தில் இடம் சண்டைக்கு போகுவதை பார்த்ததும் குமரவேலு, எங்க அப்பா மீது தான் தவறு இருக்கிறது. இனி அவரால் எந்த பிரச்சினை வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று செந்தில் மற்றும் சக்திவேல் சண்டை போடுவதை குமரவேலு தடுத்து விடுகிறார். உடனே செந்தில் ஏதும் சொல்லாமல் அமைதியாக போய்விடுகிறார்.
இதனை பார்த்த சக்திவேல், குமரவேலுவிடம் உனக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி நடந்து கொள்கிறாய் என்று கேட்கிறார். அதற்கு குமரவேலு, நீங்கதான அரசியை கல்யாணம் பண்ணனும் என்று சொன்னீங்க. நானும் அதற்கு பல வழிகளில் முயற்சி எடுத்து அரசிடம் பேசப் போனேன். ஆனால் எதற்கும் அரசி சரிப்பட்டு வரமாட்டாள். தற்போது நான் இப்படி நடந்து கொண்டால் இதைப் பற்றி செந்தில் அவர்கள் வீட்டில் பேசுவார்.
அப்பொழுது அரசியும் நடந்த விஷயத்தை புரிந்து கொண்டு என் மீதும் எந்த தவறும் இல்லை. நான் நல்லவன் என்று புரிந்து கொண்டு என்னிடம் பேச ஆரம்பித்து விடுவாள். அப்படியே பேசி என்னுடைய காதலை சொல்லி அரசி மனசை மாற்றி கல்யாணம் பண்ணி விடுவேன் என்று சொல்கிறார். உடனே சக்திவேல் சந்தோசம் உன்னுடைய விஷயத்தில் தெளிவாகத்தான் இருக்கிறாய்.
ஆனால் உண்மையிலே காதலித்து தொலைக்காத என்று சொல்கிறார். அதற்கு குமரவேலு அதெல்லாம் நிச்சயம் நடக்காது நான் அவளை கல்யாணம் பண்ணி பாண்டியனையும் குடும்பத்தையும் பழிவாங்க வேண்டும் என்பதற்கு தான் குறிக்கோளாக இருக்கிறேன் என்று சொல்லி செந்தில் மூலம் அரசிக்கு ஸ்கெட்ச் போட்டு விட்டார்.