Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ராதிகா ஏன் தன்னை வேண்டாம் என்று போனாள் என தெரியாமல் கோபி குழப்பத்தில் இருக்கிறார். இதனால் பாக்யா வீட்டில் கோபி தனியாக இருப்பது போல் பீல் பண்ணுகிறார். அப்பொழுது ஈஸ்வரி கோபியை சாப்பிட கூப்பிடுகிறார்.
ஆனால் கோபி வேண்டாம் என்று சொல்லிய நிலையில் மற்றவர்கள் அனைவரும் சேர்ந்து சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள். அப்பொழுது ஈஸ்வரியை கூப்பிட்டு பாக்கிய சாப்பிட சொல்கிறார். அதற்கு ஈஸ்வரி நான் என் பையனுக்கு சமைத்து முடித்த பிறகு அப்புறமாக சாப்பிடுகிறேன் என்று சொல்கிறார்.
உடனே பாக்யா, ஈஸ்வரியே உட்கார சொல்லிவிட்டு இனியாவை உங்க அப்பாவை சாப்பிட கூப்பிட்டு வா என்று சொல்கிறார். அதன்படி இனியா, கோபியை கூட்டிட்டு சாப்பிட வந்து விடுகிறார். பிறகு பாக்ய சமைத்த சாப்பாட்டை கோபிக்கு கொடுக்கிறார். அந்த வகையில் பழைய மாதிரி எல்லோரும் ஒன்று சேர்ந்து விட்டார்கள் என்பதற்கு ஏற்ப சேர்ந்து சாப்பிடுகிறார்கள்.
ஆனால் பாக்யா, இப்பொழுதெல்லாம் கோபி சாப்பிடுவதற்கும் தங்குவதற்கும் பணம் வேண்டும் என்று வாடகை வசூலிப்பதில்லை. ஒருவேளை பாக்கியாவுக்கும் கோபி தன்னுடனே இருந்து விடலாமோ என்று ஆசை வந்துவிட்டது போல. பிறகு மயூ டாடி வர மாட்டாரோ என்று பீல் பண்ணி ராதிகாவிடம் கேட்கிறார்.
அதற்கு ராதிகா, மயூவை சமாதானப்படுத்தும் விதமாக இனி அவர் நமக்கு வேண்டாம். உனக்கு அப்பா அம்மா எல்லாமே இனி நான் தான். அவர் நம் வாழ்க்கையில் வருவதற்கு முன் நாம் எப்படி இருந்தமோ அப்படியே இருந்து கொள்ளலாம் அதுதான் நமக்கு நிம்மதியான வாழ்க்கையாக இருக்கும்.
என்னை நம்பு நான் உன்னை நல்லபடியாக பார்த்துக் கொள்வேன் என்று மயூவை சமாதானப்படுத்தி சாப்பிட வைக்கிறார். அடுத்ததாக கோபி மொட்டை மாடியில் நின்று தனியாக ராதிகாவை நினைத்து பீல் பண்ணுகிறார். அத்துடன் ராதிகாவுக்கு போன் பண்ணாலும் ராதிகா ஃபோனை எடுக்கவில்லை என்று வருத்தப்படுகிறார்.
அந்த நேரத்தில் செழியன் போய் அப்பாவை சம்பந்தப்படுத்த பார்க்கிறார். அதற்கு கோபி நான் ஆசையாக காதலித்த பெண்ணே என் கூட இப்பொழுது இல்லை என்று நினைக்கும் போது எனக்கு வருத்தமாக இருக்கிறது. ஒருவர் பக்கத்தில் இருக்கும் போது அவங்களோட அருமை தெரியாமல் போய்விட்டது.
இப்பொழுது தான் அதனுடைய அருமை புரிகிறது என்று சொல்லி ஃபில் பண்ணி பேசுகிறார். கோபி, ராதிகாவின் நினைத்து பேசும்பொழுது செழியனுக்கு அவருடைய அம்மா பாக்கிய தான் ஞாபகத்துக்கு வருகிறார். உடனே கீழே தனியாக பாக்கியா கணக்கு பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது செழியன் அம்மா இவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறார்.
அப்பொழுது நாம் பக்கத்தில் இருந்து என்ன பண்ணினோம் என்று யோசித்துப் பார்த்து பீல் பண்ணுகிறார். இதனைத் தொடர்ந்து பாக்கியவுடன் பேசி மன்னிப்பு கேட்டு பாக்யாவின் கஷ்டங்களை புரிந்து கொள்கிறார். அத்துடன் கோபி, ராதிகாவின் நினைத்து பீல் பண்ணுகிறார் என்று செழியன் பாக்கியவிடம் சொல்கிறார்.
இதனால் கோபி மனசை மாற்ற வேண்டும் என்பதற்காக ஈஸ்வரி தொடர்ந்து தில்லாலங்கடி வேலையை பார்த்து பாக்யாவின் மனசையும் மாற்றி சேர்த்து வைத்து விடுவார் போல. அதற்கு ஏற்ற மாதிரி கொஞ்சம் கொஞ்சமாக பாக்யாவும் கோபியும் நினைத்து வருத்தப்படுகிறார்.
இதனை தொடர்ந்து கோபி, ராதிகா வீட்டிற்கு போகிறார். ஆனால் அங்கே ராதிகா மயூ இல்லை என்று ராதிகாவின் அம்மா சொல்கிறார். இதை கேட்டதும் அதிர்ச்சியான கோபி ராதிகா எங்கே போயிருக்கிறார் என்று கேட்கிறார். அதற்கு ராதிகாவின் அம்மா ராதிகா வீட்டை விட்டு மயூவை கூட்டிட்டு போய்விட்டார்.
இனி ராதிகா எங்கே இருக்கிறார் என்று யாருக்கும் தெரியாது. யாரும் அவளை தொந்தரவும் பண்ண முடியாது என்று கோபியிடம் சொல்லி விடுகிறார். இதனால் அதிர்ச்சியான கோபி, ராதிகா இல்லாமல் எப்படி வாழ்வது என்று புலம்ப ஆரம்பித்து விட்டார்.