புதன்கிழமை, பிப்ரவரி 12, 2025

அஜித்தால் குழந்தை பெத்துக்க முடியாதுனு சொன்ன பத்திரிக்கையாளர்.. வாழ்நாள் முழுதும் வருத்தப்பட வைத்த ஏகே

Ajith Kumar: பிரபலங்களை பற்றி சில நேரங்களில் ஒரு சில பத்திரிகைகள் ரொம்பவும் தரம் தாழ்ந்து எழுதுவது உண்டு. அதில் அந்த பத்திரிக்கையை படிப்பவர்களே முகம் சுளிக்கும் அளவுக்கு சில நேரம் கண்டன்டு இருக்கும்.

அப்படி சில வருடங்களுக்கு முன்பு அஜித்தை பற்றி செய்தி ஒன்று வெளியானது. நடிகர் அஜித்குமாருக்கு திருமணமாகி கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு மேலாக குழந்தை இல்லாமல் இருந்தது.

அப்போது அவர் கார் ரேசின்போது ஏற்பட்ட விபத்துக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதனால் தான் அவருக்கு குழந்தை பிறப்பதில் தாமதம் என்று கூட சொல்லப்பட்டது.

வாழ்நாள் முழுதும் வருத்தப்பட வைத்த ஏகே

ஆனால் குறிப்பிட்ட ஒரு பத்திரிக்கையில் அஜித்குமாரால் குழந்தை பெற்றுக் கொள்ளவே முடியாது என்று ரொம்பவும் அநாகரிகமாக எழுதியிருந்தார்கள்.

அந்த செய்தியை எழுதிய பத்திரிகையாளருக்கு ஒரு சில மாதங்களில் நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அந்த பத்திரிகையாளருக்கு உதவி செய்தது அஜித்குமார் தான். அப்போது அஜித் உடைய மேனேஜர் இவர் உங்களை பற்றி இப்படி செய்தி எழுதியிருக்காரு இவருக்கு எதிர்க உதவி செய்றீங்க என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு நமக்கு கெட்டது செய்றவங்க நல்லா இருக்கும்போது தான் அவங்க கிட்ட சண்டையிடனும். இந்த மாதிரி கஷ்டப்படும்போது உதவிதான் பண்ணனும் என்று சொல்லி இருக்கிறார்.

Trending News