Kayal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற கயல் சீரியலில், கடந்த மூன்று வருடங்களாக இந்த ஒரு தருணத்தை தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம் என்று சொல்வதற்கு ஏற்ப தேவிக்கு குழந்தை பிறந்து விட்டது. அதுவும் பல கஷ்டங்களையும் சிக்கல்களையும் அனுபவிக்கும் வகையில் லிப்ட்டுக்குள் மாட்டிக்கொண்டு உயிருக்கு போராடிய பிறகு தேவிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.
இதனால் தேவிக்கு ஒரு சந்தோஷத்தை கொடுக்க வேண்டும் என்று யோசித்த பெரியப்பா, வேதவல்லி வீட்டுக்கு போனார். அங்கே விக்னேஷ் இடம் குழந்தை பிறந்த விஷயத்தையும் தேவியே பார்க்க வரச்சொல்லியும் காலில் விழுந்து கெஞ்சினார். ஆனால் வேதவள்ளி, கொடூர புத்தியை வைத்து பெரியப்பாவை அவமானப்படுத்தி கழுத்தை பிடித்து வெளியே தள்ளிவிட்டார்.
இதனால் மனமடைந்து போன பெரியப்பா ஹாஸ்பிடலில் வந்து தேவிக்கு உண்மை எதுவும் தெரியக்கூடாது, என்பதற்காக விக்னேஷ் வேலை விஷயமாக பெங்களூர் போயிருக்கிறார். அதனால் குழந்தை பிறந்த விஷயமும் அவருக்கு தெரிய வாய்ப்பில்லை, ஊருக்கு வந்ததும் உன்னையும் குழந்தையும் பார்க்க வந்துவிடுவார் என்று பொய் சொல்லி சமாளித்து விட்டார்.
ஆனால் பெரியப்பா பொய் சொல்லுகிறார் என்று தெரிந்து கொண்ட கயல், பெரியப்பாவை தனியாக கூப்பிட்டு நடந்து உண்மையை கேட்கிறார். அந்த வகையில் வேதவல்லி இடம் கெஞ்சி அவமானப்பட்டதை சொல்கிறார். உடனே கயல் நாம் என்ன தவறு பண்ணினோம், நாம் ஏன் இந்த அளவுக்கு இறங்க வேண்டும் என்று சொல்லி பெரியப்பாவை சமாதானப்படுத்தி விட்டார்.
ஆனாலும் தேவிக்கு உண்மை தெரிந்த பிறகு ஆக்ரோஷமான தேவி நேரடியாக வேதவல்லி வீட்டுக்கு போய்விட்டார். போனதும் விக்னேஷை பார்த்து இந்த குழந்தைக்காக எத்தனை வருஷமாக கனவு கண்டு எவ்வளவு பேசி வைத்தோம். ஆனால் அப்படிப்பட்ட குழந்தையே உங்களால் பார்க்க வர முடியவில்லை என்றால் நீங்கள் எல்லாம் என்ன அப்பா.
இன்னும் உங்க அம்மா முந்தானை பிடித்துக்கொண்டே இந்த வீட்டில் இருப்பதாக இருந்தால் நான் நீங்கள் கேட்டபடி விவாகரத்து தருகிறேன் என்று சொல்லி விவாகரத்துக்கு கையெழுத்து போட்டு கொடுக்கிறார். அது மட்டும் இல்லாமல் மாமியாரையும் லெப்ட் அண்ட் ரைட் வாங்கும் அளவிற்கு தேவிக்கு குழந்தை மீது இருக்கும் அம்மா பாசத்தால் சரியான சம்பவத்தை செய்து விட்டார்.
இதுவரை கயல் மட்டுமே பொங்கிக் கொண்டிருந்த நிலையில் தேவியும் சரியான நேரத்தில் கோபத்தைக் காட்டும் விதமாக மாமியாருக்கும் வீட்டுக்காரருக்கும் பதிலடி கொடுத்து விட்டார். ஆனாலும் இனி குழந்தை பாசத்தில் இருக்கும் விக்னேஷ் குழந்தைக்காகவாவது நிச்சயம் தேவியுடன் சேர்ந்து விடுவார். தேவியை சேர்க்க மனமில்லாமல் இருக்கும் வேதவல்லியை விட்டு கயல் குடும்பத்துடன் சரண் அடைந்து விடுவார்.