எதிர்நீச்சல் 2 சீரியலில் குந்தவை அறிவுக்கரசியின் பிளான், சிக்கிய சக்தி.. தர்ஷன் ட்ராமா, துரோகியாக மாறிய கதிர்

Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், குணசேகரன் வீடு லாஜ் ஆக மாறி கொண்டு இருக்கிறது. அதாவது குணசேகரன் வீட்டுக்குள் நுழைந்ததும் வீட்டை விட்டு நான்கு பெண்களும் போய்விட்டார்கள். இந்த சான்சை பயன்படுத்தும் விதமாக அறிவுக்கரசி சமைப்பதற்கு ஒரு ஆள் கூட்டிட்டு வந்தார், பெரியம்மாவையும் அங்கேயே உட்கார வைத்து விட்டார்.

அடுத்ததாக நிச்சயதார்த்தம் கல்யாணம் என்பதால் அன்புக்கரசியையும் கூட்டிட்டு வந்து அதே வீட்டில் தங்கிவிட்டார். தற்போது சக்தியின் பிசினஸ் பார்ட்னராக நுழைந்த குந்தவையும் குணசேகரன் வீட்டுக்குள் இருக்கிறார். கரிகாலன் என்ன சொந்தத்தில் அங்கு இருக்கிறார் என்று தெரியாமல் அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறார். ஆக மொத்தத்தில் சம்பந்தமே இல்லாதவர்கள் தான் அந்த வீட்டில் தங்குகிறார்கள்.

இதுல வேற குணசேகரின் அம்மா, நான்கு பெண்களை வீட்டுக்கு வரவழைத்து ராமேஸ்வரத்திற்கு போக வேண்டும் என்று தர்ஷனை தூது அனுப்பி இருக்கிறார். தர்ஷனுக்கு சுத்தமாக ஈஸ்வரி கண்டாலே பிடிக்காது, அம்மா என்று கூட மதிக்கவே மாட்டார். ஆனால் தற்போது வேற வழி இல்லாமல் ஈஸ்வரிக்கு போன் பண்ணி நான் உன்னை பார்த்து பேச வேண்டும் அம்மா என்று சென்டிமென்ட் டிராமாவை போட ஆரம்பித்து விட்டார்.

அந்த வகையில் தர்ஷனுக்காக ராமேஸ்வரம் போகவும் வீட்டிற்கு வரவும் நான்கு பெண்களும் முடிவெடுக்க போகிறார்கள். இதற்கு பருத்தி மூட்டை பேசாமல் குடோனில் இருந்திருக்கலாம் என்பதற்கு ஏற்ப தான் இவர்களுடைய லட்சியமும் இருக்கிறது. குந்தவை செய்வதெல்லாம் செய்துவிட்டு தற்போது சக்தியிடம் உனக்கு தொந்தரவாக இருக்கும் என்றால் நான் வீட்டை விட்டு போகிறேன் என்று ஒரு டிராமா போடுகிறார்.

மேலும் இது எல்லாத்தையும் பார்க்கும் பொழுது அறிவுக்கரசி மற்றும் குந்தவை இரண்டு பேரும் சேர்ந்து பிளான் பண்ணி குணசேகரன் வீட்டிற்கு வந்தது போல் தான் தெரிகிறது. குணசேகரன் குடும்பத்தை காலி பண்ண வேண்டும் என்று பிளான் பண்ணி ஒவ்வொருவரையாக சிக்கவைத்து வருகிறார்கள். இதில் சக்தியும் சிக்கிக்கொண்டார், கதிரும் மாட்டிக் கொண்டார் என்பதற்கு ஏற்ப அறிவுக்கரசி என்ன சொன்னாலும் அதை நம்பிக் கொண்டு வருகிறார்.

அது மட்டும் இல்லாமல் அண்ணனையே ஏமாற்றும் அளவிற்கு சொத்துக்களை தன் பெயருக்கு மாற்றிக் கொண்டு மிகப்பெரிய துரோகியாகவும் கதிர் மாறிவிட்டார். கதிர் என்ன ஆச்சு என்று தெரியாமலேயே ஓடி ஒளிந்திருக்கிறார். கதிரை பற்றி கொஞ்சம் கூட சந்தேகப்படாமல் குணசேகரனும் தெனாவட்டிலே இருக்கிறார். ஆனால் அவ்வப்போது சக்திக்கு கோவம் மட்டும் வந்து விடுகிறது.

அந்த வகையில் அறிவுக்கரசி குடும்பத்தை பார்த்தாலே சக்திக்கு பிடிக்கவில்லை. ஆனாலும் அந்த குடும்பத்துடன் சம்பந்தம் பேசுவதற்கு சக்தி எந்தவித மறுப்பும் சொல்லாமல் தலையாட்டிக் கொண்டுதான் இருக்கிறார். இதுல வேற எனக்கு என்று சுயமாக சிந்திக்கும் பொறுப்பு இருக்கிறது, எந்த முடிவாக இருந்தாலும் நான் எடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என அண்ணிகளிடமும் சண்டை போட்டு பேசினார். தற்போது அந்த பேச்சு எல்லாம் காற்றிலே பறந்து போய்விட்டது என்பதற்கு ஏற்ப குந்தவை சொல்வதைக் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்.

Leave a Comment