3 சீரியலை முடித்துவிட்டு புதுசாக 5 சீரியலை கொண்டு வரும் சன் டிவி.. ஆடுகளத்தை தொடர்ந்து வர இருக்கும் புது சீரியல்

Sun Tv Serial: சன் டிவியில் வரும் சீரியல்கள் அனைத்துமே மக்கள் மனதை கொள்ளையடித்து டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை தக்கவைத்து வருகிறது. ஆனாலும் சில சீரியல்கள் பிரேம் டைமங்கில் ஒளிபரப்பாகியும் எதிர்பார்த்த அளவிற்கு அதிக புள்ளிகளை பெற முடியாததால் அதை தூக்கிவிட்டு அதற்கு பதிலாக புத்தம்புது சீரியலை இறக்குவதற்கு தயாராகி விட்டார்கள்.

அந்த வகையில் தற்போது ரஞ்சனி சீரியலுக்கு பதிலாக ஆடுகளம் சீரியல் புதுசாக வருகிறது. ரஞ்சனி சீரியலை தொடர்ந்து அடுத்தடுத்து முடிய போகும் சீரியல் என்னவென்றால் மதியம் மூன்று மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியலும் காலையில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியலும் முடியப்போகிறது.

இந்த இரண்டு சீரியலுமே கிட்டத்தட்ட ஆரம்பித்து 800 எபிசோடுகளை தாண்டியதால் இதை முடித்துவிட்டு அதற்கு பதிலாக புத்தம் புது சீரியலை கொண்டு வரப் போகிறார்கள். அது மட்டுமில்லாமல் இந்த மூன்று சீரியல்களை தொடர்ந்து இன்னும் ஒரு சில மாதங்களில் முடிவுக்கு வரப்போகும் சீரியல் மல்லி.

இந்த சீரியல் ஆரம்பத்தில் மக்களை கவர்ந்தாலும் தற்போது பின்தங்கி போய்விட்டது என்று சொல்வதற்கு ஏற்ப டிஆர்பி ரேட்டிங்கில் டல் அடித்து விட்டது. இதனை தொடர்ந்து ஆயிரம் எபிசோடுக்கு மேல் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலும் ஒரு சில மாதங்களில் முடிக்கப் போவதாக தகவல் வெளியாயிருக்கிறது.

இதற்கிடையில் முடிய போகும் சீரியலுக்கு பதிலாக வரப்போகும் புது சீரியல் என்னவென்றால் செல்லமே, இந்த சீரியலில் சுந்தரி நாடகத்தில் நடித்த கார்த்திக் என்பவரும் ஜீ தமிழ் மற்றும் விஜய் டிவியில் கலக்கி வந்த கதாநாயகி ரேஷ்மாவும் சேர்ந்து நடிக்கிறார்கள்.

அடுத்ததாக ஜீ தமிழில் கார்த்திகை தீபம் சீரியலில் நடித்த தீபா மற்றும் தெய்வமகள் சீரியல் ஹீரோ பிரகாஷ் இணைந்து நடிக்கும் பூவே செம்பூவே நாடகமும் விரைவில் வரப்போகிறது. இதனை தொடர்ந்து பராசக்தி மற்றும் சாந்தி நிலையம் போன்ற இரண்டு சீரியல்களும் தயாராகி இருக்கிறது. இந்த சீரியல் ஒவ்வொன்றும் அடுத்தடுத்து வெளிவருவதால் பழைய சீரியல்களை கூடிய சீக்கிரத்தில் முடிக்கப் போகிறார்கள்.

2 thoughts on “3 சீரியலை முடித்துவிட்டு புதுசாக 5 சீரியலை கொண்டு வரும் சன் டிவி.. ஆடுகளத்தை தொடர்ந்து வர இருக்கும் புது சீரியல்”

  1. ஓடிக்கொண்டிருக்கிற சீரியல்களை முடிக்காமல் இருக்கிற நேரத்தில் (மல்லிதொடர் முடிந்ததும் 11மணியிலிருந்து அடுத்த நாள் சீரியல் துவங்கும் நேரத்திற்கு இடைப்பட்ட நேரம் மற்றும் மாலை 3.30 மணி படத்தை நிறுத்திவிட்டு புதிய சீரியல்களை களமிரக்கலாமே. என்ன சொல்ல வர்றேனா. சன் டீவிய ஓபன் பண்ணினால் சீரியல் மட்டும் ஓடனும். மங்கோத்தா சன் டீவி = சீரியல் டீவி. விளம்பரத்துலேயே கல்லா கட்டலாமே. தயா /கலா நிதி மாறன்களே இந்த யோசனைக்கு லட்சகணக்குல பணம் கொடுங்க. தனியார் மருத்துவ மனைகளுக்கு அள்ளி அள்ளி வீசுறீங்களே அத மாதிரி காவேரி மாறன் அவர்களே!!!

Leave a Comment