Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், காவேரி கர்ப்பமானதை நினைத்து சந்தோஷப்பட்டாலும் யாரிடம் சொல்ல முடியாத ஒரு சூழ்நிலையில் மாட்டிக்கொண்டார். அட்லீஸ்ட் விஜய்க்கு சொல்லலாம் என்று போன் பண்ணிய பொழுது விஜய், தாத்தா வீட்டில் இருக்கும் பொழுது வெண்ணிலாவுக்கு நினைவு திரும்பிவிட்டது என்ற தகவல் காவிரிக்கு தெரிந்து விட்டது.
அதனால் போனில் சொல்ல வேண்டாம் நேரடியாக பார்த்து பேசலாம் என்று காவேரி விஜய்க்காக காத்துக் கொண்டிருந்தார். அப்படி விஜய் வந்த பொழுது காவிரியை பார்த்து பேசுகிறார். அப்பொழுது காவேரி நமக்கு கல்யாணம் ஆனதை வெண்ணிலாவிடம் சொல்லிவிட்டீர்களா என்று கேட்கிறார். அதற்கு இப்பொழுதுதான் வெண்ணிலா உடம்பு சரியாகி இருக்கிறது. இந்த சூழலில் சொல்ல முடியாது என்பதால் நான் இன்னும் சொல்லவில்லை.
இதுதான் உனக்கு பிரச்சனை என்றால் இப்பொழுதே நான் போன் பண்ணி சொல்கிறேன் என்று விஜய் சொல்கிறார். அதற்கு காவேரி இப்ப வேண்டாம் என்று தடுத்து நிறுத்திவிட்டு விஜய் நீங்க அப்பாவாக போகிறீர்கள் என்று சொல்ல வருகிறார். ஆனால் அதற்குள் ஓனர் வந்து விட்டதால் காவேரி நாளைக்கு நாம் இருவரும் கோவிலில் சந்தித்து பேசலாம். அங்கே வாங்க ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும் என்று சொல்லிவிட்டு போய்விடுகிறார்.
பிறகு எப்படியாவது காவிரி அம்மாவையே சமாதானப்படுத்த வேண்டும் என்று விஜய் முயற்சி செய்கிறார். அப்படி முயற்சி எடுத்த பொழுது சாரதாவிடம் பேசுகிறார். ஆனால் வழக்கம் போல் விஜய்யை பார்த்து சாரதா திட்டிவிட்டு போய்விடுகிறார். இதனால் மனவருதத்தில் இருக்கும் விஜய்க்கு பாட்டியிடம் இருந்து போன் வருகிறது. அதாவது வெண்ணிலவுக்கு நினைவு திரும்பியதால் விஜய கேட்டு பிரச்சினை பண்ணுகிறார்.
உடனே பாட்டி, நீ வீட்டுக்கு சீக்கிரம் வா என்று விஜயை வரவழைக்கிறார். வீட்டுக்கு விஜய் போன பொழுது வெண்ணிலா விஜயை கட்டி பிடித்துக் கொள்கிறார். உடனே விஜய் என்ன பண்ணுகிறாய் வீட்டில் எல்லோரும் இருக்கிறார்கள் ஏதாவது யோசிக்கிறியா என்று கேட்கிறார். அதற்கு வெண்ணிலா, யார் இருந்தா என்ன நாம் இரண்டு பேரும் கல்யாணம் பண்ணி புருஷன் பொண்டாட்டி ஆகி விட்டோம். இனி யாருக்காக நாம் பயப்பட வேண்டும் என்று சொல்கிறார்.
இதை கேட்டதும் தாத்தா பாட்டி மற்றும் ராகினி அதிர்ச்சியாகி விட்டார்கள். அதனால் இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் இருக்கும் விஜய்யிடம் காவிரி உண்மை சொல்லாமல் மறைத்து விடுகிறார். அதே நேரத்தில் சாரதா குடும்பத்தில் இன்னொரு சந்தோஷமான விஷயமும் நடக்கப்போகிறது. அதாவது கங்காவும் கர்ப்பமாக போகிறார். இதை ஆஸ்பத்திரியில் செக் பண்ணும் விதமாக கங்காவுடன் குமரன் மற்றும் சாரதா சென்று உறுதிப்படுத்திக் கொள்கிறார்.
அந்த வகையில் கங்காவை ஒட்டுமொத்த குடும்பமும் தாங்கி சந்தோசப்படுத்த போகிறார்கள். இதை பார்க்கும் பொழுது காவிரி தமக்கும் இந்த மாதிரி ஒரு தருணம் கிடைக்காதா என்று ஏங்கப் போகிறார்.