பாண்டியன் வளர்ப்பு தப்பாகவில்லை, செந்தில் எடுத்த உருப்படியான முடிவு.. அரங்கேற்றத்திற்கு தயாராகிய ராஜி

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியன் சொன்னபடி பேங்கில் இருந்து செந்தில் பணத்தை எடுத்து விட்டார். அந்த பணத்தை கடையில் இருக்கும் பாண்டியனிடம் கொடுக்கப் போகும்பொழுது இடையில் செந்தில் மாமனார் செய்த குளறுபடிகள் செந்தில் மனசு கொஞ்சம் தடுமாறி விட்டது. அதாவது 10 லட்ச ரூபாய் பணம் கொடுத்து விட்டால் அரசாங்க வேலை கிடைத்துவிடும் என்று மாமனார் செந்தில் மனசில் ஆசை தூண்டி விட்டார்.

இதனால் செந்திலும் அரசாங்க உத்தியோகத்தில் சேர்ந்து விட்டால் சுயமாக நாம் நிற்கலாம், அப்பாவிடம் வேலை பார்த்து அடிமையாக இருக்க வேண்டாம் என்று முடிவு எடுத்து விட்டார். இதையெல்லாம் சரி செய்ய வேண்டுமென்றால் 10 லட்ச ரூபாய் இருந்தால் போதும் என்ற தீர்மானத்துடன் கையில் இருக்கும் பணத்தை வைத்து மாமனாரிடம் கொடுப்பதற்கு தயாராகி விட்டார்.

அப்படி கொடுப்பதற்கு ஒரு நிமிஷத்துக்கு முன் பாண்டியன் சொன்ன விஷயம், அரசி கல்யாணம் எல்லாத்தையும் யோசித்துப் பார்த்த நிலையில் முதலில் அரசி கல்யாணம் தான் முக்கியம் என செந்தில் முடிவு எடுத்து விட்டார். அதனால் கொடுக்க வந்த பணத்தை கொடுக்காமல் அரசி கல்யாணம் முடியட்டும் அதன் பிறகு என்னுடைய வேலை விஷயத்தை பற்றி பேசிக் கொள்ளலாம் என்று சொல்லி அங்கே இருந்து கிளம்பி விட்டார்.

பாண்டியன் வளர்ப்பு எப்போதும் தப்பாகாது என்பதற்கு ஏற்ப செந்தில் சரியான நேரத்தில் ஒரு தெளிவான முடிவை எடுத்து இருக்கிறார். அடுத்ததாக சரவணன், தங்கமயில் வீட்டிற்கு வந்ததும் நீ இனி அந்த ஹோட்டலில் வேலை பார்ப்பதற்கு போக வேண்டாம். நான் வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லி சமாளித்துக் கொள்கிறேன். உன் சர்டிபிகேட்டை நான் வாங்கித் தருகிறேன் உன்னுடைய விபரங்களை மட்டும் எனக்கு அனுப்பு என்று சொல்லிவிட்டு வீட்டில் இருந்து கிளம்பி விடுகிறான்.

இதனால் என்ன பண்ணுவது என்று தெரியாமல் தங்கமயில் முழித்துக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் கதிர் ஆசைப்பட்ட மாதிரி ஒரு பைக் வாங்கி கொடுக்க வேண்டும் என்று தீர்மானத்திற்கு வந்த ராஜி கோவிலில் நடக்கும் அரங்கேற்றத்திற்கு தயாராகி விட்டார். அந்த வகையில் மேடையில் ஏறி ஆடுவதற்கு தயாராகிய ராஜியை ஊரில் இருப்பவங்க கிண்டல் அடிக்கும் விதமாக பேசுகிறார்கள்.

வெளியூரிலிருந்து வந்து பரிசை வெல்லலாம் என்று நினைப்பதற்கு என்ன ஒரு தைரியம் வேண்டும் என்று எல்லோரும் பேச ஆரம்பித்த நிலையில் கோமதி, மீனாவிடம் அவள் ஒன்னும் ஆட வேண்டாம் கூப்பிடு என்று சொல்கிறார். அதற்கு மீனா கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என்று சொல்கிறார். ராஜி ஆடி அனைவரது வாயும் அடைத்து பரிசை வென்று விடுவார்.

அதிலும் யாரும் எதிர்பார்க்காதபடி முதல் பரிசான காரை வென்று விடுவார். அதனால் பாண்டியன் அரசிக்கு கொடுக்க வேண்டிய காரை வாங்காமல் ராஜி வின் பண்ணிட்டு வந்த காரை சீதனமாக கொடுத்து விடுவார்.