எதிர்நீச்சல் 2 மணிவிழாவை நடத்த வேறு ஒரு தந்திரமான ரூட்டை கையில் எடுத்துள்ளார் குணசேகரன். ஈஸ்வரியின் அப்பா சேதுராமனை வீட்டிற்கு வரவழைத்து கொம்பை சீவி விட்டுள்ளார். வரும் நேரத்தில் இவர் தம்பிகளை கூட்டிக்கொண்டு வெளியே சென்று விட்டார்.
தம்பிகளிடம் இன்னும் அரை மணி நேரத்தில் நல்ல செய்தி வரும் என சஸ்பென்ஸ் கொடுக்கிறார். சேதுராமன் வீட்டிற்குள் நுழைந்த உடனே கும்டி அடுப்புபோல் போல்தகதகவென அனைவரிடமும் காட்டம் காட்டுகிறார். மணிவிழா நடக்கவில்லை என்றால் இந்த அப்பாவை மறந்து விடு என ஈஸ்வரியை எச்சரிக்கிறார்.
குணசேகரனின் ஆட்டம் தெரியாத சேதுராமன் அவர் திருந்தி நல்ல மனிதனாக மாறிவிட்டார். இனிமேலும் நாம் அவருக்கு எதிராக நிற்கக்கூடாது. அவர் ஆசைப்படி மணிவிழா நடக்க வேண்டும் என ஈஸ்வரியை எச்சரித்து விட்டு செல்கிறார். ஈஸ்வரியும் மணிவிழாவிற்கு ஒரு மனதாக சம்மதித்தது போல் தெரிகிறது.
குணசேகரனிடம், சேதுராமன் மணிவிழாவிற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அறிவுறுத்தி உள்ளார். என் பொண்ணு வந்து மணிவிழாவை நடத்தி தருவா என்று வாக்குறுதியும் கொடுத்துள்ளார். சைக்கோ குணசேகரன் மணிவிழா ஆசையில் உள்ளுக்குள் பூரித்து போய் உள்ளார்.
மறுபக்கம் தம்பிகள் நம் வீட்டில் விழாக்கோலம் ஆரம்பித்து விட்டது என கொண்டாடத் தொடங்கி விட்டனர். அதைப்போல் மாமியார் விசாலாட்சி அமையாரும் விழாவில் நம் வீட்டுப் பெண்களால் நமக்குப் பெருமை சேர வேண்டும் என மகன்களிடம் எச்சரிக்கிறார்.