1. Home
  2. சினிமா செய்திகள்

கொங்கு மண்டலத்தில் தளபதி.. TVK விஜய்க்கு கிடைத்த அமோக வரவேற்பு

கொங்கு மண்டலத்தில் தளபதி.. TVK விஜய்க்கு கிடைத்த அமோக வரவேற்பு

TVK-Vijay: தமிழக வெற்றி கழகத்தின் முதல் பூத் கமிட்டி மாநாடு கோவையில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. அதை முன்னிட்டு இன்று காலை தலைவர் விஜய் கோவை சென்றார்.

அதற்காகவே காத்திருந்த கட்சித் தொண்டர்கள் விமான நிலையத்திலேயே அவருக்கு அமோக வரவேற்பு கொடுத்தனர். வழக்கம் போல விஜய்யும் சிரித்தபடி கையசைத்து சென்றார்.

அதைத்தொடர்ந்து தற்போது அவர் திறந்த வேனில் மக்களையும் தொண்டர்களையும் பார்த்து உற்சாகமாக கையசைத்தபடி சென்ற வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

இதில் வழக்கம் போல ரசிகர்கள் தளபதி தளபதி என உற்சாக குரல் எழுப்பி ஆரவாரம் செய்தனர். இதனால் கொங்கு மண்டலம் தற்போது சித்திரை திருவிழா போல் காணப்படுகிறது.

கொங்கு மண்டலத்தில் தளபதி

அதில் சிலர் வாகனத்தின் மீது ஏறி வழக்கம் போல சேட்டை செய்தனர். ஆனாலும் அவர் பொறுமையாக சிரித்தபடி அவர்களை டீல் செய்தார்.

இப்படி ஒவ்வொரு வீடியோவாக வந்து கொண்டிருக்கிறது. இதை ஷேர் செய்து வரும் டிவிகே தொண்டர்கள் அடுத்தது மதுரை சம்பவமும் இருக்கு என ஆர்ப்பரித்து வருகின்றனர்.

ஏற்கனவே விஜய் பொதுவெளியில் வந்தாலே மீடியாக்களின் கவனம் முழுவதும் அவர் மீதுதான் இருக்கும். அதில் இன்று அவருக்கு கிடைத்த உற்சாக வரவேற்பு மற்ற அரசியல் பிரபலங்களை கொஞ்சம் அசைத்து பார்த்துள்ளது.

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.