எதிர்நீச்சல் 2 குணசேகரன் மற்றும் ஈஸ்வரியின் மணிவிழா ஏற்பாடு மிக ஜருராக நடைபெற்று வருகிறது. தம்பிகள் அனைவரும் இதை மிகவும் பிரமாண்டமாக கொண்டாடுவதற்கு பலத்த ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். ஆளாளுக்கு வரவை மீறி மொய் செய்வதற்கு திட்டம் போடுகின்றனர்.
இந்த மணிவிழாவிற்கு ஈஸ்வரியின் ஒத்துழைப்பு இருக்குமா என்பதுதான் குணசேகரனின் மனதில் பெரிய கேள்விக்குறியாக ஓடி வருகிறது. அதற்குண்டான வேலைகளை பெரிய டிராமா போட்டு அரங்கேற்றி வருகிறார். அதன் ஒரு கட்டமாக மருமகள்களிடம் தன்மையாக நடந்து கொள்கிறார். உங்களை சொல்வதற்கு நான் யார்? நீங்கள் உங்கள் இஷ்டம் போல் இருங்கள் என வேஷதாரியாக பேசி வருகிறார்.
தனது மனைவி ஈஸ்வரி மனதில் என்ன இருக்கிறது என்பதுதான் இப்பொழுது குணசேகரனுக்கு தெரிய வேண்டும். ஒரு பக்கம் பாத்ரூமில் கையில் அடிபட்ட குணசேகரனை குளிப்பாட்டி ஒரு மனைவியாய் தன் கடமையை செய்கிறார். மறுபக்கம் சுய உரிமைக்காகவும் போராடுகிறார். இதனால் தன் மீது என்ன அபிப்பிராயம் வைத்திருக்கிறார் என்பதை குணசேகரன் கணக்கு போடுகிறார்.
இப்படி மனைவிக்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்வது போல் உச்சகட்ட ட்ராமாவை அரங்கேற்றி வருகிறார் குணசேகரன். எல்லாவற்றுக்கு மேலாக வீட்டுப் பெண்கள் ஜவுளி எடுத்ததையும் தாண்டி குணசேகரன் ஈஸ்வரிக்கு ஒரு சேலை வாங்கி வந்துள்ளார்.
எல்லோரும் பேசிக் கொண்டிருக்கையில் குணசேகரன் சேலையை எடுத்துக்காட்டுகிறார். உடனே விசாலாட்சி அதை பார்த்ததும் இந்த சேலை நான் உடுத்த மாட்டேன் என கூறுகிறார். உடனே குணசேகரன் இது உனக்கு இல்லை ஈஸ்வரிக்கு என அவருக்கு மொக்கை கொடுக்கிறார். சேலை, ரொமான்ஸ், பாசம் என கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து வருகிறார் குணசேகரன்.