அரசியல் என்றாலே சில பல பரபரப்பான விஷயங்கள் நடந்துகொண்டே இருக்கும். அதுவும் இந்த தற்பொழுது உள்ள சூழ்நிலைகளை சொல்லி தெரிய வேண்டியதில்லை. நம்ம சினிமாக்களும் அரசியல் பற்றிய படங்கள் பல எடுத்துள்ளன அதிலும் பல திருப்பங்கள் வந்துள்ளது.
மக்களாட்சி:
மக்களாட்சி படத்தில் மம்முட்டி பேசும் ஒரு காட்சி ரொம்ப பிரபலம். ஒரு சீனில் வரியில்லாத பட்ஜெட் தாக்கல் செய்யவேண்டும் என்று மம்முட்டி சொல்ல, மதுவிலக்கைக் கொண்டு வந்ததால அரசுக்கு 200 கோடி வருமானம் இழப்பு. இப்ப வரியும் போடலைன்னா எப்படி வருமானம் வரும்? என்றொரு அதிகாரி கேட்கிறார்.
அதற்கு மம்முட்டி, நீங்க உங்க நிலத்தை 10 லட்சத்துக்கு வாங்கி 50000க்கு ஏன் பதிவு பண்ணினீங்க? 13% வரின்னதால ஆறாயிரத்துச் சொச்சம் வரி கட்னீங்க. அதே குறைச்சு 4% தான் வரின்னு சொல்லீருந்தா, ஒழுங்கா 40000 கட்டிருப்பீங்க.
வரிய ஏத்தி ஜனங்கள் அரசாங்கத்தை ஏமாத்தறதவிட, வரியை கொறச்சு ஒழுங்கா வசூலிச்சாலே, அரசாங்கத்துக்கு 200 கோடி ரூபா தாராளமா வரும். மேலும் அவர் ஆட்சி, இவர் ஆட்சி வரும்னு சொல்வோமே தவிர மக்களாட்சி வராது என பட்டையை கிளப்பிய படம் மக்களாட்சி.
அமைதிப்படை:
சத்யராஜை தேர்வு செய்து தேர்தலில் போட்டியிடச் செய்வார் மணிவண்ணன். தேங்கா பொறுக்கிக் கொண்டிருந்த அமாவாசை, நாகராஜசோழனாக வந்து நிற்பார். மனுதாக்கல் செய்யும் பொழுது பெயர் கொடுக்கும் போது ராஜபரம்பரை என சொல்வதும், மணிவண்ணனுக்கு முதலில் மரியாதை கொடுத்து பின்பு அவர் முகத்திலேயே சிகரெட் புகை ஊதுவதுமாக மாஸா இருந்தது.
அடிமட்டத்திலிருந்து வந்த ஒருவன் தலைவனாக மாறுவதை அட்டகாசமாக நடித்துக் காட்டியிருப்பார் சத்யராஜ். கூடவே மணிவண்ணன் தரும் ஆலோசனைகளும், திட்டங்களும் என பக்கா அரசியல் படம். இப்போதும் இதன் எந்த இரு கதாபாத்திரத்தையும் உங்களால் நிஜ சூழலில் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடியும்.
முதல்வன்:
அரசியலில் ஒரு நாள் முதல்வர் எல்லாம் சாத்தியமா என்பதை மிக அழகாக சொல்லியிருப்பார் இயக்குனர் ஷங்கர் இந்தப் படமே ரஜினிகாந்திடம் சென்று விஜயிடம் சென்று பின்னர்தான் அர்ஜுன் நடித்திருந்தார். மேலும் அர்ஜுனுக்கு எந்தவித அரசியல் பின்புலமும் இல்லாத காரணத்தினால் அவருக்கு இந்த வாய்ப்பு வந்தது.
இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கும் ரகுவரன், அர்ஜூனின் உதவியாளராக வரும் மணிவண்ணன் போன்றவர்கள் எல்லாம் ஏதோ ஒரு அரசியல் பிரமுகரை கருத்தில் கொண்டுதான் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
கொடி:
அரசியலில் பெரிய அளவில் வேலை செய்து வருகிறார் அண்ணன் தனுஷ். அவரைக் காதலிக்கும் கதாபாத்திரம் த்ரிஷாவு. ஒரு கட்டத்தில் த்ரிஷாவுக்கு தனக்குப் போட்டியாக தனுஷ் நிற்கிறார் எனத் தெரிகிறது. அதனால் கொஞ்சமும் யோசிக்காமல் தனுஷைக் கொல்கிறார்.
அண்ணனை இழந்த சோகத்தில் இருக்கும் தம்பி தனுஷ் நேராக கட்சியில் சேர்கிறார். சாதுவாக இருந்த தம்பி, முழு அரசியல்வாதியாக மாறி த்ரிஷா முன் வரும் கொடி படத்தின் அந்த சீனை நீங்கள் சமீபத்தில் எங்கோ பார்த்திருக்கலாம்.
என் உயிர் தோழன்:
அடிமட்ட தொண்டனின் முழுமையான அரசியல் படமே இதுதான். பாரதிராஜாவின் கைவண்ணத்தில் படம் நல்ல பெயர் பெற்றது. அதில் நடித்த ஹீரோ கடைசி காலத்தில் ஒரு விபத்தில் முதுகெலும்பு முறிந்து கிடந்தார். இந்த படம் அந்த காலகட்டத்தில் சரியான ஓடவில்லை இருந்தாலும் எந்த காலத்திலும் இந்த அரசியலை ஒப்பிட்டு பார்க்கலாம்.