வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

திருமணமும் வேண்டாம், சினிமாவும் வேண்டாம்.. வெறுத்துப் போய் ஒதுங்கிய 38 வயது வாரிசு நடிகை

பல வருடங்களாக சினிமாவில் வெற்றி கொடியை நாட்டி வரும் பிரபலங்களில் சிலரின் வாரிசுகள் மட்டுமே சினிமாவில் ஜெயித்து காட்டியிருக்கிறார்கள். பல பிரபலங்களின் வாரிசுகள் ஒரு தரமான வெற்றிக்காக போராடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அப்படி ஒரு வெற்றியை கொடுக்க முடியாது சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கிறார் வாரிசு நடிகை ஒருவர்.

இயக்குனராகவும், நடிகராகவும் வெற்றி பெற்ற நடிகர் பாக்யராஜுக்கு சாந்தனு, சரண்யா என்ற இரு வாரிசுகள் இருக்கின்றனர். அதில் சாந்தனு ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்தாலும் தற்போது கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதேபோன்று பாக்யராஜின் மகள் சரண்யாவும் சில வருடங்களுக்கு முன்பு தன் அப்பாவின் இயக்கத்தில் அறிமுகமானார்.

Also read: பாக்யராஜ் சாயலில் நடித்த 4 நடிகர்கள்.. டைமிங் காமெடியில் பட்டைய கிளப்பும் சிவகார்த்திகேயன்

ஆனால் அதன் பிறகு அவருக்கு வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. இதனால் சரண்யா சினிமா பற்றிய படிப்பை படிக்க வெளிநாட்டிற்கு சென்றார். அங்கு அவர் ஒருவரை காதலிக்கவும் செய்தார். ஆனால் அந்த நபர் அவரை ஏமாற்றியதால் வெறுத்து போய் இந்தியாவுக்கே திரும்பி வந்துவிட்டார்.

இருப்பினும் மனதளவில் சோர்ந்து போன அவர் பலமுறை தற்கொலைக்கு கூட முயற்சி செய்திருக்கிறார். அவரின் நல்ல நேரம் பெற்றோர்களால் காப்பாற்றப்பட்டு தற்போது தனக்கு பிடித்த மாதிரியான விஷயங்களில் கவனத்தை செலுத்திக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் சரண்யா இப்போது ஆடை வடிவமைப்பு மற்றும் அது சம்பந்தமான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

Also read: டி.ராஜேந்தர், பாக்யராஜ் போல வளர முடியாமல் போன நட்சத்திரம்.. பன்முகத் திறமை இருந்தும் புகழடையாமல் போன பரிதாபம்

இப்படி தன்னை பிசியாக வைத்துக் கொள்ளும் சரண்யா திருமணம் என்றால் மட்டும் முடியாது என்று மறுத்து விடுகிறாராம். இத்தனைக்கும் அவருடைய தம்பி சாந்தனுவுக்கு திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகிவிட்டது. தற்போது 38 வயதாகும் சரண்யா திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் வெறுத்துப் போய் பேசி வருகிறாராம்.

அவருடைய மனநிலையை மாற்ற எவ்வளவோ முயற்சி செய்தும் பாக்யராஜுக்கு அது தோல்வியில் தான் முடிந்திருக்கிறது. இப்படி தன் மகள் தனிமரமாக நிற்கிறாரே என்ற வருத்தம் பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா இருவருக்கும் இருந்தாலும் என்றாவது ஒருநாள் மகள் மனசு மாறுவார் என்று ஆர்வத்தில் காத்திருக்கிறார்களாம்.

Also read: குடிப்பழக்கத்திற்கு அடிமையான பாக்யராஜ் பட ஹீரோயின்.. நொந்து நூடுல்ஸ் ஆன சம்பவம்

Trending News