புதன்கிழமை, ஜனவரி 22, 2025

6 கோடி பட்ஜெட் படத்திற்கு லட்சக்கணக்கில் மட்டுமே வசூல்.. எழ முடியாத அளவுக்கு அடிவாங்கும் சாந்தனு

என்னதான் வாரிசு நடிகர்களாக சினிமாவிற்கு சிலர் என்ட்ரி கொடுத்தாலும் அவர்களால் டாப் நடிகராக மாற முடியவில்லை. அதிலும் நடனத் திறமை, நடிப்பு திறமை என சிறு வயதில் இருந்தே தன்னுடைய தந்தை பாக்யராஜ் அவர்களின் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நடிகர் சாந்தனு. அதன் பின் வரிசையாக பல படங்களில் நடித்தார்.  இருப்பினும் அந்த படங்கள் அனைத்தும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வெற்றி பெறவில்லை. அதன் பின் சாந்தனு விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தில் பார்கவ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தநடித்திருந்தார்.

ஆனால் அந்த படத்தில் விஜய்யை காப்பாற்றும் காட்சிகளை எல்லாம் டெலிட் செய்து விட்டதாக அவருடைய நண்பரும் அந்தப் படத்தின் இயக்குனருமான லோகேஷ் கனகராஜ் மீது அதிருப்தி தெரிவித்தார்.  இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சாந்தனுவின் இராவணக் கூட்டம் என்ற படம் வெளியானது.
இந்த படம் மாபெரும் வெற்றி பெறும் என அவர் எதிர்பார்த்து காத்திருந்தார்.

Also Read: லியோ படத்தில் லோகேஷ் கொடுக்கும் அடுத்த சர்ப்ரைஸ்.. செண்டிமெண்டாக தாக்கிய தளபதி

ஆனால் இப்போது மூன்று நாள் வசூல் நிலவரத்தை பார்ப்பதன் கதி கலங்கி போய் இருக்கிறார். ஏனென்றால் இந்த படமும் சாந்தனுக்கு சரியான ரிசல்ட்டை கொடுக்கவில்லை. இந்த படத்தில் ராமநாதபுரம் மாவட்ட இளைஞராகவே மாறி கஷ்டப்பட்டு நடித்தும் முடித்தார். இதில் சாதிய பிரச்சனைகளை பற்றிய விஷயங்களை துணிச்சலுடன் கூறியதால் பிரபலங்கள் பலரும் இந்த படத்திற்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இருப்பினும் கடந்த வெள்ளிக்கிழமை மிகக் குறைந்த தியேட்டர்களில் மட்டுமே ரிலீஸ் ஆன இராவண கோட்டம் படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் பெரிதளவில் ஆர்வம் காட்டவில்லை அதிலும் கொடுமை என்னவென்றால் 6 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம்  4 வருடங்களுக்கு முன்பாகவே ஆரம்பிக்கப்பட்டு கொரோனா உள்ளிட்ட பிரச்சினைகளால் சிக்கி ரொம்பவே தாமதமாகவே ரிலீஸ் செய்யப்பட்டது.

Also Read: இந்த வாரம் தியேட்டரை குறிவைத்த 4 படங்கள்.. நாக சைதன்யாவுக்கு போட்டியாக வரும் ராசாகண்ணு

இப்படிப்பட்ட சூழலில் 3 நாட்களில் சாந்தனுவின் இராவணக் கோட்டம் வெறும் 45 லட்சம் மட்டுமே வசூல் செய்திருப்பது படக் குழுவை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. ஒட்டுமொத்தமாக 1 கோடியை கூட வசூலிக்காத இந்த படத்தை நம்பி வாங்கிய தியேட்டர் உரிமையாளர்களும் விழி பிதுங்கி நிற்கின்றனர்.

இவ்வாறு ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய முழு முயற்சியையும் கொடுத்துக் கொண்டிருக்கும் சாந்தனுவிற்கு அடி மேல் அடி விழுகுவதால் பெரும் கவலையில் இருக்கிறார். 2008 ஆம் ஆண்டு சக்கரகட்டி படத்தின் மூலம் அறிமுகமாகி இப்போது வரை எந்த ஒரு அங்கீகாரமும் பெற முடியவில்லை என்கின்ற மிகுந்த மன வருத்தத்தில் ஆழ்ந்துள்ளார். இதனால் இவரது நண்பர்கள் பலரும் இவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Also Read: சினிமாவில் ஜொலிக்க முடியாமல் போன 5 வாரிசு நடிகர்கள்.. மகன்களை கரை சேர்க்க தவறிய குரு, சிஷ்யன்

Trending News