திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

8 நடிகைகளுடன் நடித்த ஒரே நடிகர்.. தற்போது இருக்கும் இடம் தெரியாமல் இருக்கும் கோடீஸ்வரன்.!

தமிழ் சினிமாவை பொறுத்த வரைக்கும் ஒரு சில நடிகர்கள் நல்ல திறமை இருந்தும், ஒரு சில படங்களிலேயே காணாமல் போய்விடுகிறார்கள். அவர்கள் படங்களை நடிக்கவில்லை என்றாலும் நடித்த ஒரு சில படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மனதிற்கு நெருக்கமாகிவிடும். இவர்கள் மீண்டும் நடிக்க மாட்டார்களா என்று ஏங்கும் சில நடிகர்கள் கூட இருக்கிறார்கள்.

அப்படி எந்த தகவலும் இல்லாமல் காணாமல் போன நடிகர்களை ஒரு லிஸ்ட்டே போட்டுவிடலாம். சினிமாவிற்கு நுழைந்த போது நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவிட்டு, அதன் பின்னர் கொஞ்சம் பெயர் கிடைத்தவுடன் அசால்ட்டாக கதை தேர்வு செய்வதும், இயக்குனர்கள் அல்லது தயாரிப்பாளர்களிடம் ஏதாவது பிரச்சனை பண்ணுவதும் தான் இவர்கள் காணாமல் போவதற்கு மிகப்பெரிய காரணமாக அமைந்து விடுகிறது.

Also Read:ஜீவன் பிறப்பிலேயே கோடீஸ்வரராமே.. வெளிவந்த தெரியாத பல உண்மைகள்

அப்படி கோலிவுட் சினிமாவில் இருந்து திடீரென காணாமல் போன நடிகர் தான் ஜீவன். நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா நடித்த காக்க காக்க திரைப்படத்தில் வில்லனாக நடித்த இவருக்கு இயக்குனர் கௌதம் மேனன் பின்னணி குரல் கொடுத்திருப்பார். அதன் பின்னர் இவர் யுனிவர்சிட்டி என்னும் படத்தில் ஹீரோவாகவும் நடித்தார். இருந்தாலும் ஜீவனுக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படம் திருட்டுப் பயலே தான்.

கதையின் ஹீரோவாக இருந்தாலும் இவர் முழுக்க முழுக்க நெகட்டிவ் கலந்த ரோலில் நடித்திருந்தார். திருட்டுப் பயலே திரைப்படத்தை தொடர்ந்து ஜீவனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் நான் அவன் இல்லை. பெண்களை ஏமாற்றும் மன்மதனாக இந்த படத்தில் அவர் நடித்திருந்தாலும், அவருடைய நடிப்பு மிகப்பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது, படமும் சூப்பர் ஹிட் ஆனது.

Also Read:காக்க காக்க முரட்டு வில்லனை 4 வருடங்களாக ஒதுக்கி வைத்த சினிமா.. இந்த ஒரு காரணத்தினால் தான் விலகினாரா?

படத்தின் முதல் பாகத்திலேயே அப்போதைய முன்னணி நடிகைகளான சினேகா, நமீதா, கீர்த்தி சாவ்லா, ஜோதிர் மையி ஆகியோருடன் டூயட் பாடினார் ஜீவன். இதேபோன்று இரண்டாம் பாகத்தில் லட்சுமி ராய், ஸ்வேதா மேனன், ரக்சனா மோரியா, ஸ்ருதி பிரகாஷ் எனல் நான்கு நடிகைகளை வேட்டையாடினார். அதன் பின்னர் ஜீவனுக்கு வேறு எந்த பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.

நல்ல நடிப்பு திறமை இருந்தும் ஜீவன் சினிமா வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தாமல் தவற விட்டு விட்டார். இதற்கு காரணம் சினிமாவில் நடித்து தான் சாப்பிட வேண்டிய நிலை இவருக்கு இல்லை. இவர் மிகப்பெரிய கோடீஸ்வரர். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தாததால் சினிமா இவரை தூக்கி எறிந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

Also Read:பாண்டியாக்கு பதில் நடிக்கவிருக்கும் மிரட்டும் வில்லன்.. காக்க காக்க-2க்கு குட் நியூஸ் சொன்ன 3பேர்

Trending News