புதன்கிழமை, ஜனவரி 15, 2025

Pandian Stores 2: மச்சான்களை சீண்டிப் பார்த்த பாண்டியனுக்கு விழுந்த பெரிய அடி.. நாத்தனார் உடன் கூட்டணி போட்ட மீனா

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ஊரில் இல்லாத குடும்பத்துல சம்பந்தம் வச்சுட்டோம் என்று பாண்டியன் தலைகால் புரியாமல் ஆடுகிறார். ஆனால் இருப்பதிலேயே மட்டமான பொய்ப்பித்தலாட்டம் பண்ணும் குடும்பத்தில் தான் பொண்ணு எடுக்கிறார் என்று தெரியாத ஒரு மட சாம்பிராணியாக இருக்கிறார்.

இவர் தான் இப்படி இருக்கிறார் என்றால் இவருடைய குடும்பத்தில் இருப்பவர்களும் அப்படியே தங்கமயில் குடும்பத்தை கண் மூடித்தனமாக நம்புகிறார்கள். ஆனால் இதில் மருமகளாக வந்த மீனாவிற்கு மட்டும் ஆரம்பத்தில் இருந்து அந்த குடும்பத்தின் மீது ஏதோ சந்தேகம் வந்து கொண்டே இருக்கிறது. இதைப் பற்றி அவ்வப்போது தெரியப்படுத்தினாலும் பாண்டியன் குடும்பத்தில் இருப்பவர்கள் யாரும் நம்பவில்லை.

சொந்த செலவில் சூனியம் வைத்த பாண்டியன்

இதனை தொடர்ந்து சரவணனுக்கு கல்யாணத்தை பண்ணி வைப்பதற்கு பாண்டியன் அனைத்து ஏற்பாடுகளையும் பண்ணி விட்டார். அத்துடன் எதிர் வீட்டில் இருக்கும் மச்சான்களை சீண்டி பார்க்கும் அளவிற்கு ஓவர் அதம்பல் பண்ணி அனைவரையும் கடுப்பேத்தி விட்டார். பிறகு பாண்டியன் குடும்பத்தில் இருப்பவர்கள் பெண் வீட்டிற்கு போய்விட்டார்கள்.

ஆனால் போன இடத்தில் கடன்காரங்கள் இந்த கல்யாணத்தை நான் எப்படி நடத்த விடுகிறேன் என்று பிரச்சனை பண்ணுகிறார்கள். இதனை பார்த்தும் அங்கு இருப்பவர்களுக்கு யாருக்கும் சந்தேகம் வரவில்லை என்றால் எந்த அளவிற்கு கண்மூடித்தனமாக இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. ஆனாலும் அந்த இடத்திலேயும் மீனாவிற்கு மட்டும் சந்தேகம் வருகிறது.

பிறகு இவருடைய நாத்தனார் குழலிக்கும் கொஞ்சம் சந்தேகம் ஏற்பட்டு விட்டது. அந்த வகையில் மீனாவும் குழலியும் சேர்ந்து என்ன பித்தலாட்டம் பண்ணியிருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூட்டணி போடுகிறார்கள். ஏற்கனவே குழலிக்கு என்ன சந்தேகம் என்றால் தங்கமயில் போட்டிருந்த நகை அனைத்தும் ரொம்பவே ஜொலித்தது.

உண்மையான தங்க நகை அந்த அளவிற்கு இருக்காது. அதனால் எனக்கு அப்பவே சந்தேகம் ஏற்பட்டது. இதைப்பற்றி கேட்டவுடன் தங்கமயில் அம்மா ஏதோ சொல்லி சமாளித்து விட்டார். ஆனால் இதை அப்படியே விட்டு விடக்கூடாது என்ன உண்மை என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று குழலி மீனாவிடம் சொல்கிறார்.

எப்படியும் கல்யாணம் முடிகிற வரை எந்த உண்மையையும் பாண்டியன் குடும்பத்திற்கு தெரியப்போவதில்லை. அதன் பிறகு தெரிந்த உடன் பாண்டியனுக்கு மிகப்பெரிய ஆப்பு இருக்கிறது. பிறகு இந்த விஷயத்தை கேள்விப்பட்ட மச்சான்கள் சும்மாவா இருப்பார்கள். ஓவராக ஆட்டம் போட்ட பாண்டியனுக்கு ஒட்டுமொத்தமாக பேர அதிர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது.

Trending News