செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

சூர்யா vs ரன்பீர் கபூர்.. புது புரளியை கிளப்பி மொத்தமாய் வாங்கி கட்டி கொள்ளும் வடக்கன்ஸ், அட! இது வேற லெவல் சண்டை

Surya vs Ranbir Kapoor: கடந்த சில வருடங்களாகவே பாலிவுட் சினிமாவில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ரெக்கார்ட் பிரேக் படங்கள் எதுவும் இல்லாமல் இருந்தது. ஒரு காலத்தில் இந்திய சினிமா உலகின் ராஜாக்களாக வாழ்ந்து வந்த பாலிவுட் காரர்களால் இதை கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தெனிந்திய சினிமாவில் நிறைய படங்கள் நல்ல கதைகள் மிகப்பெரிய வெற்றியை அடைந்து வருவதால், இந்தி சினிமாக்காரர்கள் தங்களுடைய இருப்பை காட்டிக் கொள்வதற்காக சம்பந்தமே இல்லாத படங்களை எல்லாம் தலைமீது வைத்துக் கொண்டாடி வருகிறார்கள்.

சமீபத்தில் பாலிவுட்டில் ரிலீசான படங்களில் நல்ல வெற்றியைப் பெற்ற படம் என்றால் ஷாருக்கானின் பதான் மற்றும் ஜவான் தான். அதிலும் ஜவான் படம் தமிழ் சினிமா இயக்குனர் அட்லீ இயக்கியது. அதைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான அனிமல் படம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு கதை அம்சத்துடன் இல்லாமல் அதிக வன்முறையை கொண்ட படமாக இருந்தாலும், தங்களுடைய தோல்வியை ஒத்துக்கொள்ள மனம் இல்லாத இந்தி சினிமாக்காரர்கள் இந்த படத்தை ஓஹோ என பாராட்டி வருகிறார்கள்.

சரி இவர்களுடைய ரசனை இந்த அளவுக்கு தான் இருக்கிறது என விட்டுவிடலாம் என்று பார்த்தால் அவர்கள் வம்புக்கு இழுத்திருப்பது தமிழ் சினிமா ரசிகர்களை. அனிமல் படம் பயங்கர வன்முறை கதை என ஏற்கனவே நிறைய விமர்சனங்கள் வெளிவந்தது. தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு இந்த படம் அந்த அளவுக்கு ஈர்ப்பை கொடுக்கவில்லை. இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ரன்பீர் கபூர் ரத்த களரியுடன் இருப்பது போல் ஒரு கெட்டப் இருக்கும்.

Also Read:சூர்யா படத்தால் நெஞ்சுவலி வராத குறை தான்.. அத்தனை கோடிகளை இழந்து இடி தாங்கியாய் நிற்கும் தயாரிப்பாளர்

ரன்பீர் கபூரின் இந்தத் தோற்றத்தை தற்போது கடந்த சில வருடங்களுக்கு முன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் வரும் ரோலக்ஸ் கேரக்டருடன் ஒப்பிட்டு பேசி வருகிறார்கள். ரோலக்சை விட, அனிமல் படத்தின் ரன்பீர் கபூர் கேரக்டர் தான் சிறப்பாக இருக்கிறது என கொஞ்சம் ஓவராக சொம்பு தூக்கி, தமிழ் சினிமா ரசிகர்களின் ஈகோவை தொட்டுப் பார்த்ததால் தற்போது சமூக வலைத்தளத்தில் பெரிய அளவில் சண்டை நடந்து கொண்டிருக்கிறது.

சூர்யா vs ரன்பீர் கபூர்

இரண்டு வருடத்திற்கு முன்பு ரிலீஸ் ஆன விக்ரம் படத்தில் வரும் இரண்டு நிமிஷ கேரக்டர் ரோலக்ஸ் சமீபத்தில் ரிலீசான படத்தின் கேரக்டருடன் ஒப்பிட்டு பார்ப்பதிலேயே அவர்களுடைய தோல்வி உறுதியாகி இருக்கிறது. கேமியோ ரோல் போல் இரண்டு நிமிடம் வந்த சூர்யா இப்படி மீண்டும் டிரண்டாகுவது அவருடைய ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பெருமையாகத்தான் இருக்கிறது.

Rolex
Rolex

ரோலக்ஸ் கேரக்டர் மட்டுமில்லாமல் அனிமல் படத்தை பொன்னியின் செல்வன் படத்துடனும் ஒப்பீடு செய்து பேசி வருகிறார்கள். இந்தி மற்றும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இடையே நடக்கும் இந்த கட்டப்பஞ்சாயத்தில் தெலுங்கு சினிமா ரசிகர்கள் தாமாக முன்வந்து கலந்து கொண்டு, தங்களால் முடிந்தவரை கொளுத்திப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது சம்பந்தப்பட்ட மீம்ஸ்கள் மற்றும் வீடியோக்களை பார்க்கும் பொழுது ரொம்பவே சுவாரசியமாகத்தான் இருக்கிறது.

Also Read:மயிலு பொண்ணு குயிலுடன் ரொமான்ஸ் பண்ண தயாராகும் சூர்யா.. இது நியாயமா கர்ணா?

Trending News