புதன்கிழமை, ஜனவரி 15, 2025

குக் வித் கோமாளிக்கு குட் பை.. சேனலை விட்டு வெளியேறிய பிரபலம், மொத்த டிஆர்பியும் போச்சே!

Cook with comali: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. உண்மையை சொல்லப்போனால் மற்ற சேனல்கள் எல்லாம் விஜய் டிவியின் ஐடியாவை தான் அப்படியே உல்டா பண்ணி தங்களுடைய சேனலில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு உலக அளவில் ரசிகர்கள் பெருகி இருக்கிறார்கள்.

பாலா, புகழ், மணிமேகலை, சிவாங்கி என விஜய் டிவியின் பிராண்டுகள் மொத்தமும் சேர்ந்து குக் வித் கோமாளிக்கு மிகப்பெரிய தூண்களாக இருந்தார்கள். ஒரு சமையல் நிகழ்ச்சியில் இப்படி வயிறு குலுங்க சிரிக்க வைக்க முடியும் என்பதை செய்து காட்டியது இந்த நிகழ்ச்சி. முதல் சீசனில் குக்குகள் இடம் அடி வாங்கிய கோமாளிகளாக இருக்கட்டும், குக்குகளிடம் ரொமான்ஸ் பண்ணும் கோமாளிகளாக இருக்கட்டும் பார்ப்பதற்கே ரொம்ப சுவாரசியமாக இருக்கும்.

குக் வித் கோமாளி முதல் இரண்டு சீசன்களை கம்பேர் பண்ணும் பொழுது மூன்றாவது சீசனில் புகழ் இல்லாதது கொஞ்சம் டல்லடிக்க ஆரம்பித்தாலும் பாலா அந்த இடத்தை நிரப்பினார். அதேபோன்று நான்காவது சீசனில் திடீரென சிவாங்கி குக்காக மாறியது, மணிமேகலை ஆங்கர் ஆனது என அந்த நிகழ்ச்சியின் அடையாளம் மொத்தமும் மாறிவிட்டது. இதனால் குக் வித் கோமாளி நான்காவது சீசன் டிஆர்பி கொஞ்சம் அடி வாங்கவும் ஆரம்பித்தது.

Also Read:இந்த வார டிஆர்பி-யில் டாப் 6 லிஸ்டில் ஏற்பட்டிருக்கும் அதிரடி மாற்றம்.. சன் டிவியை திணறடித்த விஜய் டிவி

சமீபத்தில் குக் வித் கோமாளி ஐந்தாவது சீசன் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில் முதலுக்கே மோசம் என்பது போல் வழக்கமான குழுவில் இருந்து முக்கியமான பிரபலம் ஒருவர் விலகி இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு கோமாளிகள் எந்த அளவுக்கு பக்க பலமாக இருந்தார்களோ அதே அளவுக்கு பெரிய பக்க பலமாக இருந்தவர்கள் தான் நடுவர்களான செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட்.

மொத்த டிஆர்பியும் போச்சே!

வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளி நிகழ்ச்சியாக இருக்கட்டும் அதற்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சிகளாக இருக்கட்டும் ரொம்பவே ஸ்ட்ரிக்ட்டான ஜட்ஜ் ஆக இருப்பார். முதல் சீசனில் இவர் தன்னை ரொம்பவும் ஸ்ட்ரிக்ட்டாக காட்டிக் கொண்டாலும் இரண்டாவது சீசனில் தொடங்கி அவரும் காமெடி களத்தில் இறங்கி எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தார். அதே நேரத்தில் சில கோமாளிகளை அவர் கிண்டல் செய்வது அவர் மீது நெகடிவ் விமர்சனங்களையும் கொண்டு வந்தது.

வெங்கடேஷ் பட் கோமாளிகளுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டி பெரிய அளவில் வைரலானது. ஆனால் ஐந்தாவது சீசனில் தான் பங்கேற்க போவதில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார். ஏற்கனவே சிவாங்கி மற்றும் மணிமேகலை போன்றவர்கள் இந்த டீமில் இருந்து விலகிக் கொள்ள இப்போது வெங்கடேஷ் பட் கூட சேர்ந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருப்பது மொத்த டிஆர்பிக்கும் ஆப்பு வைக்கும் விதமாக அமைந்து விட்டது.

Also Read:திருடனுக்கு தேள் கொட்டியதாய் முழிக்கும் மித்ரா.. உண்மை புரியாமல் அன்பை வெறுக்கும் ஆனந்தி

Trending News