புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கல்யாணம் முதல் பட வாய்ப்பு வரை நயனை வச்சு செய்யும் தனுஷ்.. இவங்களுக்குள்ள அப்படி என்ன பஞ்சாயத்து தெரியுமா?

Dhanush – Nayanthara: ஜான் ஏறினால் முழம் சறுக்கும் என்று சொல்வார்கள். அதை நயன்தாராவுக்கு இப்போ சரியாக பொருந்தி விட்டது. ஏற்கனவே நயன்தாராவுக்கு சினிமா மார்க்கெட் தகிட தாம் போட்டுக் கொண்டு இருக்கிறது. போதாத குறைக்கு வரும் வாய்ப்பை எல்லாம் தட்டிக் கழித்தால் என்னதான் செய்வார்.

இந்த முறை நயன்தாராவை அலைக்கழித்து பார்ப்பது நடிகர் தனுஷ் என்று சொன்னால் நம்ப முடிகிறதா. ஆனால் அவர்தான் இந்த வேலையை செய்து கொண்டிருக்கிறார். நயன்தாராவுக்கும், தனுஷுக்கும் பஞ்சாயத்து ஏற்பட வாய்ப்பே இல்லை என தோன்றலாம்.

யாரடி நீ மோகினி படத்தில் இருந்து இருவருக்குள்ளும் நல்ல நட்பு இருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். தனுசுக்காகத்தான் நயன்தாரா எதிர் நீச்சல் படத்தில் ஒரு பாடலுக்கு கூட ஆடியிருந்தார். அதன் பின்னர் நயன்தாரா சினிமாவில் மீண்டும் என்ட்ரி கொடுக்கும் போது தனுஷ் தயாரிப்பில் நடித்த நானும் ரௌடி தான் படம் தான் அவருக்கு பெரிய அளவில் கை கொடுத்தது.

சமீபத்தில் இவர்கள் இருவருக்குள்ளும் தான் பெரிய பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கிறது. நெருங்கிய சினிமா நண்பர்களை மட்டும் அழைத்து நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டார்கள்.

தன்னுடைய திருமண புகைப்படம் மற்றும் வீடியோ எந்த விதத்திலும் வெளிவந்து விடக் கூடாது என்பது நயன்தாரா ரொம்பவும் உஷாராக இருந்தார். இதற்கு காரணம் அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை நெட் ஃப்லிப்ஸில் விற்று வியாபாரம் பார்க்கத்தான்.

இவங்களுக்குள்ள அப்படி என்ன பஞ்சாயத்து

இந்த வீடியோவை அழகாக உருவாக்கிய விக்னேஷ் சிவன் தங்கள் காதல் கதையின் ஆரம்ப காலத்தை சொல்வதற்காக நானும் ரவுடிதான் படத்தின் சில காட்சிகளையும் சேர்த்து இருக்கிறார். இதன் தயாரிப்பாளர் தனுஷ் என்பதால் இந்த காட்சிகளுக்கு அவரிடம் அனுமதி வாங்க வேண்டும்.

ஆனால் தனுஷ் இதற்கு இன்னும் சம்மதம் தெரிவிக்காமல் இருக்கிறார். இதனால் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக இந்த வீடியோ வெளிவராமல் இருக்கிறது. இனி இந்த வீடியோ வெளியானாலும் இரண்டு வருடத்திற்கு முன்னால் இருந்த எதிர்பார்ப்பு மக்களிடையே இருக்கும் என்றால் சந்தேகம் தான்.

இது போதாது என்று நயன்தாராவுக்கு வந்த பட வாய்ப்பு ஒன்றும் நடிகர் தனுஷ் மிஸ் ஆகி இருக்கிறது. விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படத்தின் வெற்றிக்கு பிறகு அந்த படத்தின் இயக்குனர் நித்திலன் உடன் இணைந்து நயன்தாரா பணியாற்றுவதாக இருந்திருக்கிறது.

சமீபத்தில் தனுஷ் நித்திலனை நேரில் அழைத்து தனக்கு ஒரு படம் பண்ணும் படி கேட்டு இருக்கிறார். நயன்தாரா அல்லது தனுஷா என்று பார்க்கும் பொழுது நித்திலனின் முதல் சாய்ஸ் தனுஷ் என்றாகிவிட்டது. இதனால் நயன்தாராவின் பட வாய்ப்பு பறிபோகிவிட்டது.

Trending News