ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

ரஜினி பெயரை வைத்து கோடிக்கணக்கில் மோசடி.. மிகப்பெரிய தில்லாலங்கடி வேலை பார்த்த கும்பல்

Super Star Rajinikanth: சினிமா நடிகர்கள் என்றாலே மக்களுக்கு எப்போதுமே அவர்கள் மீது ஒரு மாய பிம்பம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. என்னதான் தொழில்நுட்பங்கள் வளர்ந்த காலகட்டமாக இது இருந்தாலும் அதையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு நடிகைகள் மற்றும் நடிகர்களின் பெயர்களை தவறாக பயன்படுத்தி நிறைய பேர் மோசடி செய்து வருகின்றனர்.

தற்போது பேஸ்புக்கில் நடிகர் ரஜினிகாந்தின் பெயரில் மிகப்பெரிய மோசடி ஒன்று நடந்திருக்கிறது. சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் இவருடைய பெயரை பயன்படுத்தி பண மோசடி செய்வது, பொதுமக்களுக்கு பிரச்சினையாக இருப்பதோடு ரஜினியின் பெயரையும் மொத்தமாக கெடுக்கும் நோக்கத்திலேயே இருக்கிறது. இது பற்றி காவல் நிலையம் வரை புகார் சென்று இருக்கிறது.

Also Read:முதலில் ரஜினிக்கு கொடுத்த அந்த பட்டம்.. பதறிப்போய் டக்குனு மாத்திய கலைப்புலி தாணு

ரஜினிகாந்த் பவுண்டேசன் என்னும் பெயரில் அறக்கட்டளை நிறுவனம் ஒன்று பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு நிறைய உதவிகளை செய்து வருகிறார்கள். குறிப்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வு இலவச பயிற்சி இந்த நிறுவனத்தின் மூலம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த அறக்கட்டளையின் அறங்காவலர் சிவராமகிருஷ்ணன் நேற்று போலீசில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.

அந்தப் புகாரில் ரஜினிகாந்த் பவுண்டேசன் என்ற பெயரையும், ரஜினிகாந்தின் புகைப்படத்தையும் பயன்படுத்தி முகநூலில் ஒரு பக்கம் தொடங்கப்பட்டிருப்பதாகவும், அதன் மூலம் பொது மக்களிடையே பணம் வசூலித்து மிகப்பெரிய மோசடி நடந்து வருவதாகவும், இது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

Also Read:ரிலீஸ் தேதி நெருங்கும் நேரத்தில் பலவீனமான ஜெயிலர்.. சன் பிக்சர்ஸ் வசூலுக்கு வந்த மிகப்பெரிய சிக்கல்

இந்த கும்பல் பொதுமக்களிடம் பணம் வசூலித்து குலுக்கல் முறையில் அவர்களுக்கு தேவையான பரிசுகளை வழங்குவதாக சொல்லி ஏமாற்றி இருக்கிறது. கிட்டத்தட்ட ரூபாய் ரெண்டு கோடி வரை இந்த கும்பல் பணம் பறித்து இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. தற்போது இந்த தகவல் ரஜினிகாந்த் பவுண்டேஷன் நிர்வாகிகளுக்கு தெரிந்து புகார் அளித்திருக்கிறார்கள்.

இணையதளங்களில் இது போன்று சினிமா நட்சத்திரங்களின் பெயர்களை வைத்து வெளியாகும் பொதுமக்கள் ஒன்றுக்கு, இரண்டு முறை ஆராய்ந்து பார்க்க வேண்டும். நடிகர்களின் புகைப்படங்களை வைத்து வரும் குறுஞ்செய்திகள் கூட இதுபோன்ற விஷமிகளால் செய்யப்படும் ஒன்றுதான். இன்றைய நவீன காலத்தில் இப்படியும் மோசடி செய்ய நிறைய கும்பல்கள் கிளம்பி இருக்கின்றன.

Also Read:அடுத்த சூப்பர் ஸ்டாராக ஆசைப்படுகிறீர்களா.? லாபகமாக பதில் அளித்து எஸ்கேப்பான சிவகார்த்திகேயன்

Trending News