வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நடிகர் திலகம் படத்தில் இருக்கும் மிகப்பெரிய தவறு.. வரலாறு தெரியாமல் எடுக்கப்பட்ட ஹிட் படம்

தமிழ் சினிமாவில் இந்த நடிகர்களால் இதுபோன்ற கேரக்டர்கள் தான் நடிக்க முடியும் என்று ரசிகர்களே கனித்து வைத்திருப்பார்கள். அந்த நடிகர்களும் தங்களுக்கு எந்த கேரக்டர் வருமோ அதை மட்டுமே செய்து விட்டு வேறு எந்த ரிஸ்க்கும் எடுக்க மாட்டார்கள். ஆனால் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தன்னால் முடிந்த வரை எல்லா கேரக்டர்களிலும் நடித்து விட்டார்.

அவரால் ஒரு செல்வந்தராகவும் நடிக்க முடியும், ஏழையாகவும் நடிக்க முடியும். போலீஸ், கைதி, டாக்டர், ஆசிரியர், நீதிபதி என அத்தனை கேரக்டர்களையும் கச்சிதமாக பண்ணியிருப்பார் நடிகர் திலகம். மேலும் தமிழ் சினிமாவில் அதிகமாக வரலாற்று கதைகளில் நடித்தவர் சிவாஜி மட்டுமே. இன்றைய தலைமுறைகளுக்கு தன்னுடைய படங்களின் மூலம் நிறைய வரலாற்று கதைகளை சொல்லி இருக்கிறார்.

Also Read:நடிப்பில் சிவாஜியை தூக்கி சாப்பிட்ட நடிகர்.. காட்சிகளை தூக்க நினைத்த இயக்குனர், நடிகர் திலகம் கொடுத்த பதிலடி

சுதந்திர போராட்ட வீரர்களான கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டியன் கட்டபொம்மன், பகத்சிங், கப்பலோட்டிய தமிழன், போன்றவர்களை தன்னுடைய படங்களின் மூலம் கண் முன் காட்டியவர். அதுபோன்று பல புராண, இதிகாச கதைகளிலும் இவர் நடித்திருக்கிறார். மேலும் மனோகரா, இராஜராஜ சோழன், கர்ணன் போன்ற கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார்.

இதில் இயக்குனர் ஏபி நாகராஜன் இயக்கத்தில் சிவாஜி கணேசன் திருவிளையாடல் மற்றும் இராஜராஜ சோழன் திரைப்படத்தில் நடித்தார். சோழ மன்னன் ஆன இராஜராஜ சோழனின் பெருமையை பற்றி பேசிய இந்த படம் அவர் தஞ்சை கோவிலை எவ்வளவு அர்ப்பணிப்போடு கட்டினார் என்ற கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இதில் ஆரம்பக் காட்சியிலேயே ஒரு தவறு இருப்பதாக தற்போது சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

Also Read:தமிழ் சினிமாவின் 6 பெரும் தலைகள் நடித்த ‘ஏ’ படம்.. நம்ப முடியாத சிவாஜியின் படம்

அதாவது இந்த படத்தில் முதல் காட்சியிலேயே தஞ்சை கோயிலின் நந்தி சிற்பத்தை சிற்பி ஒருவர் செதுக்கி கொண்டிருப்பார் அப்போது சிவபெருமான் அவருக்கு சேவகன் போல் அவர் வெற்றிலை போட்டு துப்பும் கலசத்தை பிடித்துக் கொண்டு நிற்பார். இந்த காட்சியில் தான் மிகப்பெரிய தவறு நடந்திருக்கிறது. இராஜராஜ சோழன் பிரகதீஸ்வரர் கோவில் கட்டும் பொழுது அந்த கோவிலில் நந்தி சிலையே வைக்கப்பட வில்லையாம்.

சோழர்களுக்கு பின் ஆட்சி புரிந்த நாயக்கர்களால் தான் தஞ்சை கோவிலில் நந்தி சிலை நிறுவப்பட்டிருக்கிறது. ஒருவேளை இந்த படத்தின் இயக்குனர் அந்த அளவுக்கு கதையை ஆராய்ச்சி செய்யாமல் எடுத்து விட்டாரா அல்லது இந்த நந்தி சிலையை பற்றிய கண்டுபிடிப்பு சமீபத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டதா என்பது சரியாக தெரியவில்லை. இருந்தாலும் இராஜராஜ சோழன் படத்தில் இருக்கும் இந்த தவறு தற்போது வெளியே வந்திருக்கிறது.

Also Read:சிவாஜி கணேசன் செய்த செயலால் மிரண்டு போன பாலய்யா.. நடிகர் திலகம்னா சும்மாவா?

Trending News