புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மச்சான் தயவில் மலையேறும் சூர்யா, கார்த்தி.. 4 முன்னணி ஹீரோக்களை வளைத்து போட்ட தயாரிப்பு நிறுவனம்

சூர்யாவின் வளர்ச்சி தற்போது தமிழ் சினிமாவில் அபரிமிதமாக உள்ளது. தொடர்ந்து அவர் தேர்ந்தெடுத்து நடித்து வரும் கதாபாத்திரம் பலராலும் பாராட்டப்படுகிறது. தற்போது அதேபோல் அவரின் தம்பி கார்த்தியும் முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தில் நடித்துள்ளார். தற்போது இவர்கள் இருவரும் ஒரே தயாரிப்பு நிறுவனத்தில் படம் பண்ண போகிறார்கள்.

இந்நிலையில் சூர்யா இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது. அதேபோல் நடிகர் கார்த்தி இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்கவுள்ளார். இந்த இரு படங்களையும் இவர்களின் உறவினரான K.E. ஞானவேல் ராஜா தனது ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க உள்ளார்.

இது தவிர மேலும் இரு நடிகர்களின் படத்தை இந்நிறுவனம் தயாரிக்கயுள்ளது. நடிகர் விக்ரம் தற்போது கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார். இந்த இரு படங்களின் ரிலீசுக்காக தற்போது விக்ரம் காத்திருக்கிறார். இந்நிலையில் விக்ரமின் 61ஆவது படத்தை ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கயுள்ளது.

மேலும் சியான் 61 படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஜூலை 15 ஆம் தேதியில் இருந்து தொடங்கயுள்ளது. இந்நிலையை ஸ்டுடியோஸ் கிரீன் சார்பாக இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாக உள்ள படம் சிம்புவின் பத்துதல. கடைசியாக சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது.

இந்நிலையில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு நடித்துள்ளார். இதை தொடர்ந்து சில்லுன்னு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் சிம்பு நடிக்கிறார்.

இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைக்கிறார். மேலும் இப்படத்தில் சிம்பு கேங்ஸ்டராக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இவ்வாறு ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சூர்யா, கார்த்தி, சிம்பு, விக்ரம் ஆகியோரின் படத்தைத் தயாரிக்க உள்ளது. தற்போது டாப் நடிகர்களாக உள்ள இவர்களின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது.

Trending News