வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

நயன்தாராவை பெரிய விஷயத்தில் லாக் பண்ணி இருக்கும் விக்கி.. நெனச்சாலும் டைவர்ஸ் பண்ண முடியாது

Nayanthara: புடிச்சாலும் புளியங்கொம்பா புடிக்கணும்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க. புளியங்கொம்ப புடிச்சா மட்டும் பத்தாது, அதை கைக்குள்ளேயே வச்சிக்கிறது எப்படி என்ற திறமையை விக்கி கிட்ட தான் கத்துக்கணும் போல. கடந்த சில நாட்களாக விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக செய்திகள் வெளியாகின. அதை தொடர்ந்து தான் நயன்தாராவே நினைச்சாலும், விக்கியை கழட்டி விட முடியாது என்ற தெளிவான தகவல் ஒன்று கிடைத்திருக்கிறது.

நயன்தாரா, விக்னேஷ் சிவன் காதலிக்கிறார்கள் என்ற செய்தி வெளியான போது அட வழக்கம் போல நயன்தாரா இவரையும் கழட்டி விட்டுருவாங்க என பேசப்பட்டது. அடுத்து நயன், விக்கி கல்யாணமான போது, அவ்வளவு தான் நயன்தாராவின் மார்க்கெட், ஒரு குழந்தை பிறந்தவுடன் கோவிந்தா ஆகிவிடும் என பேசப்பட்டது. அதையும் சரகோசி முறையின் மூலம் பெற்றெடுத்து விட்டு, குழந்தைகளோடு ஜாலியாக சுற்ற ஆரம்பித்து விட்டார் நயன்தாரா.

அடுத்தடுத்து படங்கள், பிசினஸ்கள் என வெற்றிக்கு மேல் வெற்றியை நயன்தாரா பெற்று வருகிறார். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் கடந்த சில தினங்களாக நயன் விக்கி தம்பதியினர் கிடையே விவாகரத்து நடக்கப் போவதாக செய்திகள் வெளியானது. இதுக்கு காரணமும் நயன்தாராவின் இன்ஸ்டா பதிவுதான். சும்மா இருந்த காசிப்பர்களை சொறிந்து விட்டு, என்ன வேணா எழுதிக்கோங்க என்று சொல்லி, இப்போ குடும்பத்தோட சவுதி அரேபியா டூருக்கு போயிட்டாங்க.

Also Read:நயன்தாரா பட கதையை காப்பி அடித்த மஞ்சுமல் பாய்ஸ்.. வசூலில் மிரட்டும் திரில்லர்

நயன் விக்கி விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்பது வதந்தி என்றே முடிவாகிவிட்டது. சரி, அது ஒரு பக்கம் இருக்கட்டும், அப்படி நயன்தாரா நினைச்சாலும் விக்கிய விவாகரத்து பண்ணி விட முடியுமா என்ற கோணத்தில் யோசித்தால் எப்படி இருக்கும். அதற்கு கிடைத்த பதில் தான் லேடி சூப்பர் ஸ்டார் ஆக இந்திய சினிமாவை கலக்கிக் கொண்டிருக்கும் அவர், தானாக முன்வந்து நினைத்தாலும் தன் காதல் கணவரை பிரிய முடியாது.

நயன்தாரா தொழிலுக்கு மேல் தொழில் தொடங்கி வருவது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். அவரை பிசினஸில் கவனம் செலுத்த ஐடியா கொடுத்ததே விக்கி தான் என பல மேடைகளிலும் இதைப் பேசி இருக்கிறார். உண்மையில், நயன்தாரா கஷ்டப்பட்டு நடித்து சம்பாதித்து முதலீடு போட்ட அத்தனை தொழிலிலும், விக்னேஷ் சிவனின் பார்ட்னர்ஷிப் இருக்கிறது. ஒவ்வொரு தொழிலும் விக்கி பவுண்டராக இருந்தால், நயன்தாரா கோ பவுண்டராக இருப்பார். நயன்தாரா பவுண்டராக இருந்தால், விக்னேஷ் சிவன் கோ பவுண்டராக இருப்பார்.

Also Read:பிசினஸ் மூளையை வைத்து நயன்தாரா செய்த தில்லாலங்கடி.. உங்க போதைக்கு நாங்க ஊறுகாவா?

Trending News