புதன்கிழமை, ஜனவரி 15, 2025

புது குணசேகரனுக்கு ஏற்பட்ட பெருத்த அவமானம்.. டிஆர்பி அடிபட்டதால் சன் டிவி எடுத்த அதிரடி முடிவு

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சீரியலில் கடந்த இரண்டு வருஷமாக முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டு மக்களின் ஃபேவரிட் நாடகமாக இடம் பிடித்தது எதிர்நீச்சல் சீரியல் தான். இதில் என்னதான் கதை நன்றாக இருந்தாலும், இந்த நாடகத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரங்களின் எதார்த்தமான நடிப்புக்கு தான் மக்கள் அனைவரும் விரும்பி பார்த்து வந்தார்கள்.

முக்கியமாக நடிப்பின் நாயகன், எதார்த்தமான பேச்சுக்களில் மன்னன், மற்றவர்களை நக்கல் நையாண்டி செய்து கலாய்க்கும் காமெடியன் என்று அத்தனை நவரசத்தையும் முகத்தில் காட்டி வில்லத்தனமாக நடித்த குணசேகரன் கேரக்டர் தான் மக்கள் மனதில் காந்தம் போல் ஒட்டிக் கொண்டது. அப்படிப்பட்ட இவர் இல்லாததால் இந்த நாடகத்திற்கு பெரும் தடுமாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.

அந்த வகையில் இவருடைய கேரக்டரை ஈடு செய்யும் அளவிற்கு நடிகர் வேலராமமூர்த்தி பல்வேறு விதமாக தாஜா பண்ணி குணசேகரன் கேரக்டரில் நடிக்க வைப்பதற்கு முயற்சி செய்தார்கள். அதே மாதிரி அவரும் இந்த கதாபாத்திரத்தை முழு மனதுடன் எடுத்து நடிப்பதற்கு சம்மதம் கொடுத்தார். ஆனால் இவருடைய நடிப்பு குணசேகரன் கேரக்டருக்கு கொஞ்சம் கூட செட் ஆகவில்லை.

அத்துடன் அவருக்கும் இவருக்கும் எந்த அளவிற்கு பொருத்தமும் இல்லை. இவருடைய பேச்சும் செயலும் ரொம்பவே அடாவடித்தனமாக முகம் சுளிக்கும் அளவிற்கு ஓவர் பெர்பார்மன்ஸ் செய்கிறார் என்று இந்த நாடகத்தை விரும்பி பார்த்தவர்கள் ஆதங்கத்துடன் கமெண்ட்களை போட்டு வருகிறார்கள். அதனால் தான் என்னமோ சன் டிவியின் டிஆர்பி ரேட் ரொம்பவே அடிப்பட்டு இரண்டாம் இடத்திற்கு போய்விட்டது.

இதற்கு மேலேயும் இவரை நடிக்க வைத்தால் மொத்தமும் கெட்டுவிடும் என்பதற்காக புதிதாக வந்த குணசேகரன் கேரக்டரை அப்படியே க்ளோஸ் செய்ய முடிவு பண்ணி இருக்கிறது. இந்த ஒரு விஷயம் புதிதாக வந்த குணசேகரன் கேரக்டரில் நடிக்கும் வேல ராமமூர்த்திக்கு பெருத்த அவமானமாக ஏற்பட்டிருக்கிறது. அத்துடன் தற்போது எதிர்நீச்சல் சீரியல் எதிர்பார்த்த அளவிற்க்கு போகவில்லை என்பதால் சன் டிவி நிறுவனம் அதிரடியாக முடிவு எடுத்திருக்கிறது.

அதாவது எதிர்நீச்சல் சீரியலில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக இப்போதைக்கு குணசேகரன் கேரக்டரே இல்லாமல் கதையை கொண்டு வாருங்கள் என்று இயக்குனருக்கு சன் டிவி நிறுவனம் ஆர்டர் போட்டு இருக்கிறார். அந்த வகையில் புது குணசேகரனை அப்படியே க்ளோஸ் பண்ணி விட்டார்கள். அதற்குப் பதிலாக கதிர், ஞானம், கரிகாலன் மற்றும் குணசேகரின் அம்மா இவர்களை வைத்து வில்லத்தனத்தை காட்டி எப்படியாவது கதையை விறுவிறுப்பாக ஆக்குவதற்கு முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

Trending News