வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

கோபமாக பேசிய பத்திரிகையாளர், மன்னிப்பு கேட்ட சூர்யா.. நமக்கு இந்த பாலிவுட் எல்லாம் வேண்டாம் ஹீரோ சார்!

Suriya: நடிகர் சூர்யாவை மும்பையைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர் சரமாரியாக கேள்வி கேட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த கங்குவா படம் வரும் 14ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்த படத்திற்கான பிரமோஷன் வேலைகளில் சூர்யா பிசியாக இருக்கிறார். இந்த படம் பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக இருப்பதால் எல்லா மாநிலங்களிலும் பிரமோஷன் வேலைகள் நடந்து வருகிறது. மும்பையில் நடந்த பிரமோஷன் விழா ஒன்றில் தான் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

பாலிவுட் எல்லாம் வேண்டாம் ஹீரோ சார்!

சொன்ன நேரத்தை மீறி சூர்யா இந்த விழாவுக்கு லேட்டாக வந்திருப்பார் போல. இதற்காக பத்திரிகையாளர் ஒருவர் இவ்வளவு லேட் ஆக வந்தால் எப்படி நாங்கள் பிளைட் பிடித்து இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். திரும்பி போக எங்களுக்கு நேரமாகும் இல்லையா? என கோபமாக கேள்வி எழுப்புகிறார்.

Suriya
Suriya

இதற்கு சூர்யா அந்த பத்திரிக்கையாளரிடம் ரொம்பவும் பொறுமையாக பதில் சொல்கிறார். இந்த வீடியோ தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொஞ்சம் மன வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழில் அஜித் மற்றும் விஜய்க்கு அடுத்து டாப் லிஸ்டில் இருப்பவர் சூர்யா.

இவர் இந்தி படங்களில் நடிக்க நேர்ந்தால் அங்கே அறிமுக ஹீரோவாக இருப்பார். இது போன்ற சம்பவங்களை இவர் தொடர்ந்து சந்திக்க நேரிடும். அதுமட்டுமில்லாமல் பாலிவுட் திரையுலகம் புதுமுக நடிகர்களை ரொம்பவே எள்ளி நகையாக கூடிய துறை. இதனால் தயவுசெய்து நீங்கள் பாலிவுட்டுக்கு போக வேண்டாம் சூர்யா என அவருடைய ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Trending News