Sun Tv New Serial: சன் டிவி சீரியல் உடன் போட்டி போடும் விதமாக எத்தனையோ சேனல்கள் புத்தம் புது சீரியல்களை இறக்கினாலும் சன் டிவி சீரியலுக்கு ஈடாகாது என்று சொல்லும் அளவிற்கு மக்கள் தொடர்ந்து சன் டிவி சீரியலுக்குத்தான் அதிக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். அதனால் தான் டிஆர்பி ரேட்டிங்கில் அதிக புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் இருக்கிறது.
அந்த வகையில் சமீபத்தில் எதிர்நீச்சல் இரண்டாம் பாகம், அன்னம், மூன்று முடிச்சு, மருமகள், ரஞ்சினி போன்ற புது சீரியல்களை இறக்கி டிஆர்பி ரேட்டிங்கில் கெத்து காட்டி வருகிறது. ஆனாலும் இன்னும் அடுத்தடுத்து புது சீரியல்கள் வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறது.
ஆடுகளம், மெட்டி ஒலி சீரியலின் இயக்குனர் திருமுருகன் இயக்கப் போகும் புத்தம் புது சீரியல் வரிசையில் இருக்கிறது. அடுத்து இன்னும் ஒரு சீரியலாக தெய்வமகள் சீரியலின் ஹீரோ பிரகாஷ் என்கிற கிருஷ்ணா என்ட்றி கொடுக்க போகும் புத்தம் புது சீரியல்.
இதில் இவருக்கு ஹீரோயினாக ஜீ தமிழில் கார்த்திகை தீபம் என்ற சீரியலில் நடித்த ஆர்த்திகா கமிட் ஆகியிருக்கிறார். இந்த சீரியலுக்கான பட பூஜைகள் அனைத்தும் நேற்று துவங்கியாச்சு. அதனால் இன்னும் கூடிய விரைவில் அனைவரது ஃபேவரிட் ஹீரோவான கிருஷ்ணா நடிப்பில் இன்னும் ஒரு சீரியல் வரப்போகிறது.
இதற்கிடையில் ஆர்த்திகா விஜய் டிவி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த பொழுது சன் டிவி சீரியலிலும் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதனால் விஜய் டிவி சீரியலா அல்லது சன் டிவி சீரியலா என்று யோசித்து விஜய் டிவி சீரியலுக்கு நோ சொல்லி தற்போது சன் டிவி சீரியலுக்கு கமிட் ஆகிவிட்டார். மேலும் இந்த சீரியல் கயல் சீரியலுக்கு பதிலாக வரப்போகிறது.