வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய் டிவி ரொமான்டிக் ஹீரோவின் அடுத்த புது சீரியல்.. சன் டிவியின் டிஆர்பிக்கு வச்ச ஆப்பு

Vijay TV: சின்னத்திரை ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்களையும் ரியாலிட்டி ஷோக்களையும் ஒளிபரப்புவதில் விஜய் டிவியை அடிச்சுக்க ஆளே இல்லை. அந்த வகையில் இப்போது விஜய் டிவியின் ரொமான்டிக் ஹீரோவை வைத்து புத்தம் புது சீரியலை பிரம்மாண்டமாய் துவங்கப் போகின்றனர். இந்த தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே என்ற சீரியலில் நடிகர் திரவியம் மற்றும் பவித்ரா இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். முதல் பாகத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் திரவியம் மறுபடியும் ஈரமான ரோஜாவே 2 என்ற சீரியலில் ஜீவா என்ற கேரக்டரில் ரொமான்டிக் ஹீரோவாக நடித்ததன் மூலம் அவருக்கு ஏகப்பட்ட ரசிகைகள் கிடைத்தனர்.

ஆனால் இந்த சீரியல் என்னதான் விறுவிறுப்பாக சென்றாலும், இடையில் இயக்குனர் இறப்பு, புதிய இயக்குனர் என நிறைய மாற்றங்கள் நடக்க கதையும் சுதப்பியது. எனவே ஈரமான ரோஜாவே 2 சீரியல் அவசர அவசரமாக 502 எபிசோடுகளுடன் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் திரவியம் இப்போது ஒரு புதிய சீரியலில் கமிட் ஆகி உள்ளார்.

Also Read: இந்த வாரம் டிஆர்பி-ஐ கலக்கிய டாப் 6 சீரியல்கள்.. எதிர்பாராத விதமாய் எதிர்நீச்சலுக்கு கிடைத்த 2வது இடம்

விஜய் டிவியில் துவங்கப்படும் புத்தம் புது சீரியல்

குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிக்க திரவியம் ஹீரோவாக நடிக்க இருக்கும் புதிய சீரியலை இயக்குனர் பிரவீன் பென்னட் தான் இயக்க உள்ளாராம். இந்த புத்தம் புது சீரியலில் புது முகங்களை இறக்காமல் ஏற்கனவே ராஜா ராணி, பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்த நடிகர் நடிகைகளை தான் பொறுக்கி போட்டு இருக்கிறார்களாம். இதனால் ஏற்கனவே பார்த்த முகங்களை மறுபடியும் பார்க்க போகிறோம் என்றும் சின்னத்திரை ரசிகர்களுக்கு கூடுதல் சந்தோஷம் ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த சீரியலில் திரவியத்திற்கு ஜோடியாக நடிகை ஸ்ரீதா நடிக்கிறார். இவர் ஏற்கனவே கலர்ஸ் தமிழில் ‘எங்கள் வீட்டு மீனாட்சி’ என்ற சீரியலில் மீனாட்சி என்ற கேரக்டரில் கதாநாயகியாக நடித்தவர். அதேபோல் மலையாளத்திலும் சில சீரியல்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்ல சந்தானத்தின் தில்லுக்கு துட்டு 2 படத்தில் மாயா என்ற கேரக்டரில் நடித்துள்ளார்.

இப்போது விஜய் டிவியின் மூலம் நிறைய சின்னத்திரை ரசிகர்களை கவர வேண்டும் என ஸ்ரீதா களம் இறங்கி இருக்கிறார். அதுவும் திரவியத்துடன் ஸ்ரீதா இணைவது ரசிகர்களின் மத்தியில் இந்த சீரியலின் மீதான எதிர்பார்ப்பை மிகைப்படுத்தி உள்ளது. சீக்கிரமே இந்த சீரியலின் ப்ரோமோவை விஜய் டிவி வெளியிடப் போகிறது. இதனால் நிச்சயம் சன் டிவியின் டிஆர்பி பெருத்த அடி வாங்க போகிறது.

Also Read: கதிரை உருகி உருகி காதலிக்கும் ராஜி.. பாண்டியனின் மூத்த மகன் வாழ்க்கையில் கும்மி அடித்த மச்சான்கள்

Trending News