வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

ராஜமெளலியே பாராட்டிய பட்ஜெட் படம்.. 2 பாகங்களையும் பார்த்து மெய்சிலிர்க்க வைத்த இயக்குனர்

பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி தனது படங்களை அதிக பட்ஜெட் போட்டு தான் எடுத்து வருகிறார். இவரை நம்பி கோடி கணக்கில் பணத்தை கொட்டவும் தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளனர். காரணம் இவர் அதிக முதலீட்டில் படம் எடுத்தாலும் அதை 10 மடங்காக திருப்பிக் கொடுத்து விடுவார். அந்த அளவுக்கு ராஜமௌலியின் படங்கள் வசூலை குவிக்கும்.

அந்த வகையில் அவருடைய பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம் வசூல் சாதனை படைத்தது. மேலும் கடந்த ஆண்டு வெளியான ஆர்ஆர்ஆர் படமும் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என ராஜமௌலி வாக்குறுதி கொடுத்திருந்தார். இது தவிர மகாபாரதம் கதையை படமாக எடுக்கும் திட்டத்தில் ராஜமௌலி உள்ளார்.

Also Read : 1000 கோடிக்கு அடி போடும் ராஜமௌலி ஹீரோ.. தல தப்புமா என்ற பயத்தில் இருக்கும் கங்குவா டீம்

மேலும் இந்த படத்தை கிட்டத்தட்ட பத்து பாகங்களாக ராஜமௌலி எடுக்க இருக்கிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ராஜமௌலியே வியந்து பார்த்த பட்ஜெட் படம் ஒன்றை பற்றி பேசினார். அதாவது மலையாளத்தில் மோகன்லால், மீனா மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரிஷ்யம் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தை கடைசியாக பார்த்ததாக ராஜமௌலி கூறினார்.

இதில் முதல் பாகம் சுவாரஸ்யமாக இருந்ததாகவும், இரண்டாம் பாகம் மிகவும் விருவிருப்பாகவும் நன்றாக இருந்ததாக கூறியிருந்தார். மேலும் இந்த படத்தில் இயக்குனர் தனது அறிவுகூர்மையை காட்டியுள்ளார். திரிஷ்யம் படம் தன்னை மெய்சிலிர்க்க வைத்து விட்டதாக இயக்குனரை புகழ்ந்து பேசி இருந்தார் ராஜமௌலி.

Also Read : ராஜமௌலியை தூக்கி வைத்து பேசிய மணிரத்னம்.. அவர் இல்லைனா, பொன்னியின் செல்வன் இல்லையாம்

ஜீத்து ஜோசப் திரிஷ்யம் படத்தை தமிழில் பாபநாசம் என்று இயக்கியிருந்தார். கமல், கௌதமி மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில் பாபநாசம் 2 படம் எப்போது வரும் என ரசிகர்கள் ஆர்வமாக கேட்டு வருகிறார்கள். ஆனால் கமல் மற்றும் கௌதமி இப்போது பிரிந்து விட்டனர்.

ஆகையால் இதே ஜோடியில் பாபநாசம் 2 வருவது கடினம். அதுமட்டும்இன்றி தற்போது கமல் தயாரிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறார். அடுத்ததாக மணிரத்தினம் இயக்கத்தில் ஒரு படம் பண்ணுகிறார். மேலும் விக்ரம் 2 வும் கமலின் லயன் அப்பில் உள்ளது. ஆகையால் பாபநாசம் 2 இப்போதைக்கு சாத்தியம் இல்லை.

Also Read : ராஜமௌலிக்கே டஃப் கொடுக்கும் ஷங்கரின் சம்பளம்.. கேம் சேஞ்சர் படத்திற்கு இத்தனை கோடி சம்பளமா?

Trending News