வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

புகழின் உச்சியில் கொடி கட்டி பறந்த ஐட்டம் நடிகை.. ஒரே நாளில் தரைமட்டமான கேரியர்

திரையுலகை பொருத்தவரை புகழ், அந்தஸ்து எல்லாம் ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரை தான். ஏதாவது ஒரு சிறு சர்ச்சையில் சிக்கி விட்டாலே என்னதான் பெரிய நடிகையாக இருந்தாலும் அவர்களின் கேரியர் அதல பாதாளத்திற்கு சென்றுவிடும். அதற்கு உதாரணமாக மாறிய ஒரு நடிகை இப்போது அதிலிருந்து எப்படியோ மீண்டு வந்திருக்கிறார்.

அதாவது பெரிய திரை, சின்னத்திரை என ஆல் ரவுண்டராக இருக்கும் ஒரு நடிகை சில வருடங்களுக்கு முன்பு வரை நிற்கக்கூட நேரமில்லாமல் பிஸியாக நடித்து வந்தார். ஒரு நாளைக்கு 24 மணி நேரமே போதாது என்று சொல்லும் அளவுக்கு பரபரப்பாக நடித்து வந்த அந்த நடிகையின் மார்க்கெட் ஒரே நாளில் சரிவடைந்தது.

Also read: கிளாமர் காட்டியும் கிடைக்காத வாய்ப்பு.. சாதித்தே தீருவேன் என வாய்ப்புக்காக ஏங்கி கிடக்கும் நடிகை

அதாவது ஒரு பிரச்சனையின் காரணமாக நடிகையின் பெயரை கெடுக்கும் வகையில் சிலர் கிளப்பிவிட்ட புரளி அவரை மொத்தமாக ஆட்டி வைத்தது. பேர், புகழ் இருந்தாலே இது போன்ற பிரச்சனைகள் வரத்தான் செய்யும். ஆனால் நடிகையின் தனிப்பட்ட வாழ்க்கையை கூட சர்ச்சையாக்கி கேவலப்படுத்திய சம்பவமும் அப்போது நடந்தது.

எப்படி என்றால் நடிகையின் மீது இருந்த காழ்ப்புணர்ச்சியின் காரணமாக சில விஷமிகள் அவருடைய நடத்தையே தவறாக திரித்து ஒரு பிரச்சனையில் சிக்க வைத்தனர். இதை மீடியாக்கள் பல்வேறு விதமாக எழுத தொடங்கியது. இதனால் துவண்டு போன நடிகை தன் மீது எந்த தவறும் இல்லை என்று நிரூபிக்க படாத பாடுபட்டார்.

அது மட்டுமல்லாமல் அவருக்கான வாய்ப்புகளும் மொத்தமாக குறைய தொடங்கியது. ஆனாலும் எப்படியோ தன்னுடைய பிரச்சனையிலிருந்து மீண்டு வந்த அந்த நடிகை இப்போது தனக்கென ஒரு குடும்பத்துடன் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். இருப்பினும் அந்த கசப்பான உணர்வை மறக்க முடியாத நடிகை தற்போது மீடியா மக்களின் சகவாசமே வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கிறாராம்.

Also read: அழகே பொறாமைப்படும் பேரழகி.. 31 வயது நடிகை 2 மாத கர்ப்பத்தோடு உயிரிழந்த பரிதாபம்

Trending News